சென்னை – சேலம் 8 வழிச்சாலை: தி.மு.க.வின் தில்லாலங்கடி அம்பலம்!

சென்னை – சேலம் 8 வழிச்சாலை: தி.மு.க.வின் தில்லாலங்கடி அம்பலம்!

Share it if you like it

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தி.மு.க. எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். இதன் மூலம் தி.மு.க.வின் தில்லாலங்கடி அம்பலமாகி இருக்கிறது.

சென்னை – சேலம் இடையே சுமார் 277 கி.மீ. தொலைவுக்கு 10,000 கோடி ரூபாய் செலவில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று மத்திய அரசு 2018-ம் ஆண்டு அறிவித்தது. அப்போது, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடந்ததால், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், பா.ம.க.வும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், இத்திட்டத்திற்கு சேலம், தருமபுரி உட்பட 5 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கையப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால், மேற்கண்ட 5 மாவட்ட விவசாயிகளையும் தி.மு.க. தூண்டி விட்டு எதிர்ப்புத் தெரிவிக்க வைத்தது. இதனால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், சென்னை – சேலம் 8 வழிச்சாலையை பசுமை வழிச்சாலை என்று பெயர் மாற்றம் செய்தது. இந்த சாலை அமைப்பது தொடர்பாக, அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் விவசாயிகளின் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த சூழலில், பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, 8 வழிச்சாலை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இத்திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும், சுற்றுச்சூழல் அனுமதி கோரி யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றும் பதிலளித்திருக்கிறார்.

இதுதான் தி.மு.க. இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆட்சியில் இல்லாதபோது ஒரு திட்டத்தை எதிர்ப்பதும், ஆட்சியில் இருக்கிறபோது அதே திட்டத்தை ஆதரிப்பதும் என தி.மு.க. இரட்டை வேடம் போடுவது பொதுமக்கள் முன்னிலையில் அம்பலமாகி இருக்கிறது. இதையடுத்து, விவசாயிகளும், பொதுமக்களும் தி.மு.க. மீது கடும் அதிருப்தி மற்றும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இதுகுறித்து மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்…


Share it if you like it