சர்வதேச கடல்சார் இந்தியா உச்சிமாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வு இந்தியாவின் கடல்சார் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்கும், சவால்களை அறியவும், முதலீடுகளை ஈர்க்கவும், தொழில்துறையின் முக்கிய நபர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகும். இந்நிகழ்வு 2023 அக்டோபர் 17-19-ம் தேதி வரை, புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது :-
சர்வதேச கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இது ‘அமிர்த கால தொலைநோக்கு 2047’ ஐ அடைவதற்கு உதவும். ‘வளர்ச்சிக்கான துறைமுகங்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான துறைமுகங்கள்’ என்ற தனது தொலைநோக்கை நிறைவேற்ற இந்திய அரசு உழைக்கிறது:
நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு ஏற்றவாறு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகள் சிறந்த நிபுணர்கள், வல்லுநர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்கியுள்ளது:
பல்லவர்கள் சக்திவாய்ந்த கடற்படையைக் கொண்டிருந்தனர். 10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில், யாருக்கும் நிகரற்றதாக இருந்த நமது சோழர்களின் கடல்சார் வல்லமையும் திறமையும் நமது வணிகத்தையும் பாரம்பரியத்தையும் தொலைதூர நாடுகளுக்கும் விரிவுபடுத்தியது:
தமிழகம் கடலோடிகளின் பூமியாக இருந்து வருகிறது. தென்கிழக்காசியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையே வணிக, கலாச்சார தொடர்புகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன:
தென்னிந்தியாவின் சேர, சோழ, பாண்டியர்கள் சுமத்ரா, ஜாவா, மலாய் தீபகற்பம், தாய்லாந்து மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் கடல் வர்த்தக தொடர்புகளை கொண்டிருந்தனர்.