இந்துஸ்தானத்தின் பாதுகாவலன். மராட்டிய சாம்ராட் ஷத்ரபதி சிவாஜியின் போர்வாள் ” ஜெகதாம்பா ” மீண்டும் பாரதம் வருகிறது. அதை இந்திய அரசிடம் ஒப்படைக்க பிரிட்டிஷ் அரசு தயாராகி வருகிறது . இந்து சாம்ராஜ்ஜியம் கட்டமைத்து இஸ்லாமிய – கிறித்தவ படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வீர சிவாஜியின் போர் வாள் 70 – 80 கிலோ எடை கொண்டது. அதன் எடை – கூர்மை – வடிவமைப்பு – உயர் ரக கற்கள் பதித்த கைப்பிடி என்று சிவாஜியின் வீரத்தையும் – மராட்டிய செழிப்பின் சாட்சியமாக இருந்த அந்த போர் வாள் மராட்டிய வம்சத்தின் குல தெய்வமான தேவி ஜெகதாம்பிகையின் பெயரிலேயே ” ஜெகதாம்பா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டது. சிவாஜி வம்சத்தின் வீழ்ச்சிக்கு பிறகு கிறித்தவ வெள்ளையர்களால் கைப்பற்றப் பட்டு பொக்கிஷங்களோடு பொக்கிஷமாக பிரிட்டிஷ் அரச மாளிகைக்கு போனது. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாரதம் திரும்புகிறது.
சிவாஜியின் வீர வாள் தற்காலிக காட்சி பொருளாக பாரதம் வரவில்லை. தனது சிறை வாசம் தகர்த்து மீண்டும் தாயகம் திரும்புகிறது. காரணம் பாரதம் தற்போது மராட்டிய சிவாஜியின் ஆத்ம பந்தங்களால் ஆளப்படுகிறது. அவர்கள் தங்களது முன்னோர்களின் அருமை உணர்ந்தவர்கள்.அதனால் இழந்த பொக்கிஷங்களை வெறும் களவு போன செல்வமாக பார்ப்பதில்லை. தங்களின் பூர்வீக பெருமையாக – தாயகத்தின் கௌரவமாக பார்க்கிறார்கள். அதனால் ஒவ்வொரு இழப்பையும் மீட்கிறார்கள். ஒவ்வொரு வரலாற்று துரோகத்தையும் சமன் செய்கிறார்கள்.
இந்த ஜெகதாம்பா வாள் மீண்டு வருவதன் தொடர்ச்சியாக அடுத்து அந்த கோஹினூர் வைரமும் வரக்கூடிய சமிக்ஞைகள் தெரிகிறது. சமீபத்திய பிரிட்டிஷ் அரச குடும்ப முடிசூட்டு விழாவில் அந்த வைர கிரிடம் தவிர்க்கப் பட்டதன் பிண்ணனியில் இந்திய ராஜீய சங்கதிகள் ஏராளம் உண்டு.
இங்கிருந்து பிரிட்டிஷ் அரசு களவாடி போன பொக்கிஷம் மீட்பதை பாரதம் பெருமையாக கருதினாலும் அது பிரிட்டனுக்கு ராஜீய ரீதியில் பெரும் பின்னடைவு மற்றும் சர்வதேச அளவில் பெரும் கௌரவப் பிரச்சினை என்ற சிக்கலை எல்லாம் கடந்து பாரதத்தின் பொக்கிஷங்கள் பாரதம் மீண்டு வருவதில் பிரிட்டிஷ் அரசின் பிரதமர் இந்திய வம்சாவளி சார்ந்தவர் என்பது மட்டுமே காரணமல்ல.
இங்கிருந்து மோடி சர்க்கார் தேசிய இறையாண்மை என்ற பெயரில் முன் எடுக்கும் ராஜீய பரிபாலனம் முக்கிய காரணம் என்றாலும் அதையும் கடந்து இஸ்லாமிய பயங்கரவாத பிடியிலிருந்து மீளவும் – பொருளாதார சரிவிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் பிரிட்டிஷ் அரசுக்கு பாரதத்தின் துணை அவசியம். இதையெல்லாம் கடந்து இந்திய தரப்பின் நியாயத்தை அலட்சியம் செய்து விட்டு சர்வதேச சமூகத்தில் எந்த நாடும் உலவ முடியாது என்ற அளவிலான இந்திய வெளியுறவுத் துறையின் சாதுர்யம். இந்தியாவின் துணையி ன்றி மோடி சர்க்காரின் உதவியின்றி உலகின் எந்த ஒரு முக்கிய நிகழ்வும் சாத்தியமில்லை என்ற அளவிலான மோடியின் ராஜ பரிபாலனமும் முக்கிய காரணம் . இன்று சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் தான் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்த தேசத்தில் இருந்து கடத்தி போன ஒரு பொக்கிஷம் தனை இன்று பத்திரமாக அதன் தாயகத்திற்கு திருப்பி தர தயாராகிறது.
இந்தியர்கள் முட்டாள்கள் அடிமை மனோபாவம் உடையவர்கள் . அவர்களை ஆளும் அருகதை அவர்களுக்கு இல்லை. அதனால் அவர்களை பிரிட்டன் ஆள்வதையே அவர்களில் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்று எந்த பிரிட்டிஷ் பாராளுமன்ற சபையில் வின்ஸ்டன் சர்ச்சில் என்ற கிறித்தவ வெள்ளையன் எக்காளமிட்டானோ? அந்த பிரிட்டிஷ் பாராளுமன்றம் இன்று இந்திய வம்சாவளி சார்ந்த ரிஷி சுனக் தலைமையில் நடக்கிறது. காரணம் கொரோனா கால பொருளாதார முடக்கம் மற்றும் பிரிட்டிஷ் உள்நாட்டு குழப்பம் காரணமாக பிரிட்டன் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவக்கிறது. அடுத்தடுத்த பிரதமர் பொறுப்பாளர்கள் பொறுப்பில் இருந்து விலகியதால் இந்திய வம்சாவளி சார்ந்த இளைஞர் இன்று துணிச்சலாக பிரிட்டனை வழி நடத்தி போகிறார்.
இந்தியாவை இந்திய மண்ணையும் மக்களையும் நேசிக்கும் இந்திய தேசியத்தை சுவாசிக்கும் சுதேசிகள் ஆளுவதால் இந்திய அரசு வளர்ச்சி மற்றும் பொருளாதார பலத்தில் முன் நிற்கிறது. தற்போது பிரிட்டன் மீண்டு வர இந்தியாவின் ஒத்துழைப்பு – ஒருங்கிணைப்பு இரண்டும் தேவை என்பதால் இன்று பாரதத்தின் கடந்த கால இழப்புகளை பிரிட்டிஷ் அரசு சரி செய்ய தயாராகிறது. காரணம் பிரிட்டனுக்கு உதவ தயாராகும் இந்திய அரசு பிரதி பலனாக தேசத்தின் நலனை மட்டுமே முன் நிறுத்துமே தவிர ஆட்சியாளர்கள் நலனை முன்னிறுத்தி வியாபாரம் பேசாது. அதனால் பாரதத்தின் தேசிய இறையாண்மையை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்திய அரசும் தனது தவறுகளை சரி செய்ய பிரிட்டன் அரசும் தயாராகிறது.
பாரதம் மீண்டு வரும் இந்த ஜெகதாம்பா போர் வாள் வெறும் யுத்த தளவாடம் மட்டும் அல்ல. அது அன்றைய நாளில் மராட்டிய அரச வம்சத்தின் குலதெய்வ மாகவே மதிக்கப்பட்டது. இன்றளவும் இந்திய மண்ணின் ஈடு செய்ய முடியாத இழப்பில் ஒன்றாக நீடிப்பது. மீண்டு வரும் அந்த போர் வாளின் மூலம் ஈடு செய்ய படப் போவது இந்த மண்ணின் செல்வ இழப்பு மட்டும் அல்ல. தன் வாழ்நாள் முழுவதும் இந்துஸ்தானத்தின் மண்ணையும் -மக்களையும் பாதுகாக்க இந்த தேசத்தின் தேசிய – தெய்வீக மாண்பை பாதுகாக்க களமாடி வீரமரணம் தழுவிய எண்ணற்ற புண்ணிய ஆன்மாக்களின் முக்தியும் தான். சத்ரபதி சிவாஜி வாளின் வருகை சிவாஜி மகாராஜ் முதல் தாராபாய் வரை மன்னர் முதல் முதல் கடைக்கோடி வீரன் வரை அலைந்த இந்துஸ்தானத்தின் ஆன்மாக்களுக்கு அமைதியை தரட்டும்.
தாயகம் திரும்பி வரப்போவது ஷத்ரபதி சிவாஜியின் போர் வாள் மட்டுமல்ல. வீர சிவாஜியின் ஆத்ம ஸ்பரிசமும் இந்துஸ்தானத்தின் தன்மானமும் தான். இனி யாவும் மீளும். மீள்பவை யாவும் உலகை ஆளும். இதை படிக்கும் போது இப்போது மோடி அரசு இதை மீட்கிறார்கள் சரி. அரை நூற்றாண்டு காலம் பாரதத்தை ஆண்ட காங்கிரஸ் காலத்தில் ஏன்? இதை எல்லாம் மீட்க வேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை. என்ன காரணம் ? என்று யோசித்தால் அந்நிய கைக்கூலி அரசுக்கும் தேசாபிமானிகளின் அரசுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இது தானா? என்ற கேள்வியை ஒவ்வொரு இந்தியனும் உணர முடியும்.