ஆயிரம் ஓட்டைகள் இருக்கக் கூடிய கப்பல் உங்கள் கட்சி     பா.ஜ.க தலைவர் பதிலடி..!

ஆயிரம் ஓட்டைகள் இருக்கக் கூடிய கப்பல் உங்கள் கட்சி பா.ஜ.க தலைவர் பதிலடி..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பா.ஜ.க குறித்து கிண்டல்.

திருப்பூரில் தமிழக பா.ஜ.க-வின் புதிய அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள் நேற்றைய தினம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மேலும் 4 புதிய கட்டிடத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி இருந்தார். பா.ஜ.க-வின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் அவர்கள் பா.ஜ.க-வை கிண்டல் செய்யும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்து இருந்தார்.

கட்சி எழும்புகிறதோ இல்லையோ, கட்டிடங்கள் எழும்புகின்றன! நான்கு நகரங்களில் மாவட்டக் கட்சி்யின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலகக் கட்டிடங்களை ஒரே நாளில் திறக்கும் கட்சிக்குப் பாராட்டுக்கள்!

காங்கிரஸ் கட்சி தலைவரின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இவ்வாறு பதில் அளித்து உள்ளார்.

ஐயா, ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி @INCIndia. அதிலே தத்தளித்து, இலக்குத் தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள். உங்களுடைய நகைச்சுவையை தாண்டி, நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றோம் என்று உங்களுக்கு தெரியும். தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.


Share it if you like it