பாரதப் பிரதமர் உயிரில் அலட்சியம் காட்டிய பஞ்சாப் அரசு..
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ரூபாய் 42,750 கோடி மதிப்பிலான, புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட நேற்றைய தினம் சென்று இருந்தார். அவருக்கு தேவையான முழு பாதுகாப்பையும் வழங்க வேண்டிய பொறுப்பு பஞ்சாப் காங்கிரஸ் அரசு உடையது. உள்நாட்டு சதி, வெளிநாட்டு சதி, சர்வதேச சதி, என்று ஏராளமான முறையில், பிரதமர் மோடியின் உயிருக்கு கடும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு வழங்க வேண்டிய காங்கிரஸ் அரசு. மெத்தனமான முறையில் செயல்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, என்று ஏற்கனவே இரண்டு பிரதமர்களை காங்கிரஸ் கட்சி இழந்து உள்ளது. பஞ்சாபில் இருந்து வெறும் 10 கி.மீ. தொலைவிலேயே பாகிஸ்தான் எல்லை உள்ளது. பாகிஸ்தான் ராணுவமோ, அல்லது தீவிரவாதிகளோ ட்ரோன் மூலம் பிரதமர் கார் மீது குண்டுகள் வீசி இருந்தால் என்னவாகி இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
பிரதமரின் உயிரில் அலட்சியம் காட்டிய காங்கிரஸ் அரசுக்கு, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுனில் ஜாகர், தனது எதிர்ப்பினை பதிவு செய்து உள்ளார். மோடி அரசை விமர்சிக்க வேண்டும் என்றால் உடனே டுவிட்டரில். பதிவு செய்யும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.
பஞ்சாப் அரசு பற்றியோ, பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி பற்றியோ, இன்று வரை வாய் திறக்காமல் கள்ள மெளனமாக இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர், மற்றும் சோனியா காந்தி குடும்பத்திடம் இது பற்றி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.