நரிகுறவர் இனத்தை சேர்ந்த அஸ்வினி வேதனையுடன் பேசிய காணொளி ஒன்று தற்போது இனணையத்தில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து இருந்தார். இதையடுத்து, பயனாளிகளுடன் குழு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார். இப்புகைப்படத்தை, தமிழக அரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, முத்ரா கடன் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் எனவும், இதில் கூட முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் தேட முயல்கிறார் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட பல சமூக ஆர்வலர்கள் தி.மு.க. அரசை விமர்சனம் செய்து இருந்தனர்.
இதையடுத்து, நரிகுறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த மக்கள் தமிழக அரசு சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் போதிய அடிப்படைவசதிகள் இல்லை. ஆகவே, இந்த வீடு எங்களுக்கு வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இக்காணொளி, கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்து. இந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழலில் தான், நரிகுறவர் இனத்தை சேர்ந்த அஸ்வினி, முதல்வர் ஐயா பூஞ்சேரி கிராமத்தில் வந்தபோது 12 பேருக்கு ஒரு லட்ச ரூபாய் லோன் கிடைப்பதற்கான செக் கொடுத்தார்கள். பட்டா தருவதாக சொன்னார்கள் எங்களுக்கு வீடு தருவதாக சொன்னார்கள். ஆனால், அதுவும் சரியாக அமையவில்லை. முதல்வர் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் லோனில் இதுவரை யாருக்கும் லோன் கிடைக்கவில்லை. இப்போ, கடை இருந்தாத தான் லோன் கிடைக்கும் என பேங்க் மேனேஜர் சொல்கிறார். எங்களிடம், பேங்க் புக், பாஸ் புக், ஆதார் கார்டு, நலவாரிய அட்டை உட்பட எல்லா ஆதாரமும் இருக்கு சார் என உருக்கமுடன் பேசி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.