வரைபடத்தில் இந்திய பகுதிகளை இணைத்த சீனா!

வரைபடத்தில் இந்திய பகுதிகளை இணைத்த சீனா!

Share it if you like it

இந்திய எல்லைக்குள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனா அந்நாட்டு வரைபடங்களிலும் இந்திய பகுதிகளை இணைத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதற்கு இந்திய அரசு பலமுறை கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ள போதிலும் சீனா தனது போக்கை மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் சீனா வெளியிட்டுள்ள 2023 வரைபடப் பதிப்பில் அருணாச்சலப் பிரதேசத்தின் 11 பிராந்தியங்களை தங்கள் நாட்டுடன் இணைத்து வெளியிட்டுள்ளது. இதில் லடாக் பகுதியில் உள்ள அக்சை சின், தைவான்,சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியையும் சீனா இணைத்துள்ளது. இதனிடையே டிஜிட்டல் நேவிகேஷன் வரைபடங்களை வெளியிடப்படும் என்றும் சீனா அறிவித்துள்ளது.


Share it if you like it