இந்தியா – சீனா இடையே முற்றிலும் வரும் எல்லை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் அதிகம் வெறுக்கப்படும் நாடாக சீனா இருந்து வருகிறது. நிலம் மற்றும் கடல் என 21 நாடுகளுடன் தொடர்ந்து எல்லை பிரச்சனையை சீனா மேற்கொண்டு வருகிறது. தனது பொருளாதாரத்தையும், படைபலத்தையும் காட்டி சிறிய நாடுகளை சீனா தொடர்ந்து மிரட்டி வருகிறது. அதேவேளையில், இந்தியாவிடம் அதன் ’பாச்சா’ பலிக்கவில்லை என்றே சொல்லலாம்.
இந்தியாவின் புகழ் நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளன. இதனை கெடுக்கும் முயற்சியாக, இந்திய எல்லையில் தொடர்ந்து சீனா பதற்றத்தை உருவாக்கி வருகிறது. சீனாவின், இந்த அட்டூழியத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை நமது எல்லையில் மேற்கொண்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், அந்நாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தின் எல்லையோர பகுதிகளில் துடிப்பான கிராமங்கள் (விவிபி) என்ற திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தொடங்கி வைக்கிறார். அந்தவகையில், அருணாச்சல பிரதேசத்தின் 455 எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
இதுதவிர இமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட், லடாக் ஆகிய பகுதிகளிலும் இந்த விவிபி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 2022 முதல் 2026-ம் ஆண்டு வரை ரூ.4,800 கோடி செலவிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், சீனாவின் நாடு பிடிக்கும் ஆசையை இந்தியாவால் தடுக்க முடியும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.