சீனாவில் அதிபர் ஜீ ஜின்பிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருதாக, அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான ஜீ ஜின்பிங் அதிபராக இருந்து வருகிறார். இவரது அரசு கடுமையான அடக்குமுறைகளை கையாண்டு வருவதால், அந்நாட்டு மக்கள், அதிபர் ஜீ ஜின்பிங் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். ஆகவே, தன் மீதுள்ள களங்கத்தை துடைக்க, சீனாவின் உளவுக் கப்பலான யுவாங்வான் – 5 கப்பலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதுபோல அனுப்பி வைத்து, இந்தியாவை உளவு பார்க்க முயன்றார். அதேபோல, அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோசி, தைவான் வருகையின் போது, தைவான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டினார். ஆனால், நான்ஸி பெலோசி தைரியமாக வந்துவிட்டு திரும்பியும் விட்டார். ஜீ ஜின்பிங் அரசால் எதுவும் செய்ய முடியவில்லை. அதேபோல, இந்தியாவை உளவு பார்க்கும் பிளானும் பணால் ஆனது. இதுபோன்ற சம்பவங்களால், சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜீ ஜின்பிங் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில்தான், சீனாவில் ராணுவப் புரட்சி வெடித்து, ஜீ ஜின்பிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அவர் பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து அவரை பதவியிலிருந்து இறக்கி விட்டதாகவும் சீன நாட்டின் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இதுதான் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, பெய்ஜிங்கில் உண்மையில் நடந்தது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே, பெய்ஜிங் பகுதி முழுமையாக ராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு மூடப்பட்டிருப்பதாக சீன மக்களால் சமூக வலைத்தளத்தில் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், மத்திய பாதுகாப்புப் பணியகத்தின் கட்டுப்பாட்டை சீனாவின் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டோவும், பிரதமர் வென் ஜிபாவோவும் இணைந்து எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் வருகிறது.
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இ்ததகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். எனினும், சீன அரசு இதை உறுதி செய்யவில்லை.