சீனாவில் முஸ்லிம்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்: ஜி ஜின்பிங் அதிரடி!

சீனாவில் முஸ்லிம்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்: ஜி ஜின்பிங் அதிரடி!

Share it if you like it

சீன பாரம்பரியத்தின் அடிப்படையில்தான் இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவுறுத்தி இருக்கிறார்.

சீனாவில் பல மில்லியன் உய்க்குர் முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை முகாம்களில் அடைத்து வைத்து சீன அரசு சித்ரவதை செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன். இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் 4 நாள் பயணமாக ஜின்ஜியாங் பகுதிக்குச் சென்றார். இங்குதான் உய்கூர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, சீன அதிபரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த பயணத்தின்போது ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியின் அருங்காட்சியகத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங், கிர்கிஸ்தான் மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த பயணத்தின்போதுதான், சீனாவில் வசிக்கும் முஸ்லிம்கள், உலக நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்களைப் போல இல்லாமல், சீனாவின் கம்யூனிஸ்ட் சிந்தாந்தத்தின் அடிப்படையிலான சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டும் என்று சீன அதிபர் கூறியிருக்கிறார். அதாவது, சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றி வரும் சோசலிச சமுதாயத்திற்கு ஏற்ப நாட்டிலுள்ள மதங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். நாட்டில் சீனாவின் பாரம்பரிய நோக்குநிலையில்தான் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், சீன தேசத்திற்கான வலுவான சமூக உணர்வை வளர்ப்பதை அரசு வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையில், மத விவகாரங்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தி, மதங்கள் ஆக்கப்பூர்வமான விதத்தில் வளர வேண்டும்.

தவிர, மதங்களை நம்புபவர்களின் சாதாரண மதத் தேவைகள், கட்சி மற்றும் அரசாங்கத்தைச் சுற்றி நெருக்கமாக ஒன்றுபடுவதை உறுதிப்படுத்த மேம்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, தாய்நாட்டுடனான அடையாளத்தை வலுப்படுத்த அனைத்து இன மக்களுக்கும் கல்வி கற்பதற்கும், வழிகாட்டுவதற்கும் அழைப்பு விடுத்தார் ஜி ஜின்பிங். அதோடு, கலாசார அடையாளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சீன அதிபர், ஜின்ஜியாங் பிராந்தியத்தில் செயல்படும் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டினார். ஆகவே, இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை “இனப்படுகொலை” என்று மேற்கத்திய நாடுகள் முத்திரை குத்துவது தவறு என்று மறுத்திருக்கிறார்.


Share it if you like it