உலகமே இன்று ரத்த கண்ணீர் வடிக்கும் சூழ்நிலைக்கு சீனா தள்ளி விட்டு உள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. 205 நாடுகளுக்கு மேல் இன்று வரை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது கொரோனா.
பிரபல சீன வைராலஜிஸ்ட் யான் அவர்கள் ஃபாக்ஸ் நியூஸுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார்.
சீன அதிகாரிகளுக்கு இந்த கொடிய வைரஸ், பரப்புவதை பற்றி முன்பே தெரியும் என்று நான் நம்புகிறேன். கொரோனா வைரஸின் வீரியத்தை சீன அரசாங்கம் டிசம்பர் மாதம் முதலே நன்கு உணர்ந்து இருந்தது. ஆனால் அதனை உலக நாடுகளுக்கு தெரியாமல் பார்த்து கொண்டது.
மனிதனுக்கு, மனிதன் இத்தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. பல உயிர்களை காக்க முடியும் என்கின்ற எனது ஆய்வை. மேற்பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். பல சீன விஞ்ஞானிகள் வைரஸ் குறித்து பொதுமக்களை எச்சரிக்க முயன்றனர்.
ஆனால் அவர்களின் குரல் ஒலிக்காமல், அரசாங்கம் பார்த்து கொண்டது. மற்றவர்களும் இந்த விஷயத்தை பற்றி வெளியில் பேச கூடாது. என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். ஆனால் முக கவசம் மட்டும் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். உண்மையை கூறிய சீன வைராலஜிஸ்ட் யான் நிலைமை என்னவென்பது தற்பொழுது வரை மர்மமாக உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸை ஆயுதமாக பயன்படுத்துவது பற்றி 2015 – ஆம் ஆண்டே சீன ராணுவ விஞ்ஞானிகள் ஆலோசித்ததாக தகவல் தற்பொழுது கசிந்துள்ளது.
உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும், அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனா வைரஸை ஆயுதமாக பயன்படுத்தும் முறை பற்றி 2015-ஆம் ஆண்டிலேயே சீன விஞ்ஞானிகள் மற்றும் அந்நாட்டு சுகாதாரத்துறையினரும் விவாதித்திருப்பதாக அதிர்ச்சிகரமான செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. இதற்கான ஆவணம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக THE AUSTRALIAN என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
3-ஆவது உலகப்போர் உயிரியல், ஆயுதங்களால் நிகழக்கூடும் என்றும், இதன் மூலம் எதிரி நாட்டின் மருத்துவத்துறையை செயலிழக்க செய்து விட முடியும் என்று சீன விஞ்ஞானிகள் விவாதித்திருப்பதாக ஆஸ்திரேலிய பத்திரிகை தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸை சீனா தான் பரப்பியதாக பல்வேறு நாடுகள் கடும் குற்றச்சாட்டை சுமத்தி வரும் நிலையில். THE AUSTRALIAN என்ற பத்திரிகை வெளியிட்டு இருக்கும் செய்தி உலக நாடுகள் மத்தியில் மீண்டும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மூச்சு விடும் சுதந்திரத்தை தவிர எழுத்துரிமையோ, பேச்சுரிமையோ, எதுவும் சீனாவில் இன்று வரை கிடையாது. அரசுக்கு எதிராகவோ, அதிபருக்கு எதிராகவோ, யாரேனும் கருத்து தெரிவித்தால். ஒன்று அவர்கள் காணாமல் போக நேரிடும் அல்லது மரணம் அடைய நேரிடும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
கொரோனா பற்றி செய்தி வெளியிட்டதற்கு சீன பெண் பத்திரிக்கையாளருக்கு 5 ஆண்டுகள் கொடூர தண்டனையை மனித தன்மையற்ற சீனா அண்மையில் வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்கெடுத்தாலும் மோடி, மோடி, என்று மந்திரம் ஜெபிக்கும் அருணன், திருமா, சுந்தரவள்ளி, பூ உலகின் நண்பர்கள், கம்யூனிஸ்ட், கனகராஜ், குறிப்பிட்ட கட்சியின் முன் களப்பணியாளர்கள், குரல் அற்றவர்களின் குரல், பிரபல மர்ம ஊடகம், ஜின்பிங்கிற்கு எதிராக கருத்து தெரிவிப்பார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.