கட்டாய மதமாற்றம்: திடீர் ஆய்வில் சிக்கிய கிறிஸ்தவ பள்ளி!

கட்டாய மதமாற்றம்: திடீர் ஆய்வில் சிக்கிய கிறிஸ்தவ பள்ளி!

Share it if you like it

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த கிறிஸ்தவ பள்ளி மாணவிகளை மதமாற்றம் செய்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில், சி.எஸ்.ஐ. மோனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த மாதம் ஆறாம் தேதி அப்பள்ளியில், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (TNSCPCR) திடீர்  சோதனையில் ஈடுபட்டது. அப்போது, அங்கு கட்டாய மதமாற்றம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அப்பள்ளியின் விடுதி அனுமதியின்றி இயங்குவதும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததையும் அந்த ஆணையம் கண்டுபிடித்து இருக்கிறது.

இதனை தொடர்ந்து, (TNSCPCR) ஆணையம் தனது அறிக்கையை மேலிடத்திற்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பிற்கு கடிதம் எழுதி இருந்தது. அதில், பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், முதல் தகவல் அறிக்கையை உடனே பதிவு செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது.  

இதுதவிர, 24 மணி நேரத்திற்குள், மாவட்ட குழந்தைகள் நல ஆணையம் குழந்தைகளை பள்ளியில் இருந்து மீட்டு, அனுமதி பெற்ற விடுதியில் தங்க வைக்கமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, பள்ளி மாணவிகள், தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தை தொடர்பு கொண்டு, தங்களை பள்ளி நிர்வாகம் இங்கேயே தங்க வேண்டும் என வற்புறுத்துவதாக குற்றம் சுமத்தி இருக்கின்றனர். மேலும், தங்கள் பெற்றோரை அழைத்து எங்களை இங்கிருந்து மாற்றக்கூடாது என்று கடிதம் எழுதி தருமாறு அவர்களை கட்டாயப்படுத்துவதாக தெரிவித்து இருக்கின்றனர்.


Share it if you like it