மக்கள் முகத்தில் துப்பி ஆசீர்வாதம் செய்த பாதிரியாரின் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்நிய நாட்டில் இருந்து வரும் பணத்திற்கு ஆசைப்பட்டு அப்பாவிகள் மற்றும் படிப்பறிவு இல்லாத மக்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதாக கிறிஸ்தவ மிஷநரிகள் மீது பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இவர்களின், அட்டூழியங்கள், அடாவடிகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதே நிதர்சனமான உண்மை. அந்த அளவிற்கு, இவர்களது ஆதிக்கம் உலகம் முழுவதும் பரந்து விரிந்து உள்ளது. அந்தவகையில், கென்ய நாட்டை சேர்ந்த பாதிரியார் ரிஃப்ஸ் புல்லா என்பவர் கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதாக கூறி தேவாலயத்திற்கு வந்த மக்களுக்கு டெட்டாய்ல் கொடுத்து 59 பேரை பரலோகத்திற்கு அனுப்பி வைத்த சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, இந்தியாவை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், தனது சபையில் இருக்கும் ஊழியர்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என பயிற்சி கொடுத்த காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவர் சிறுவனின் நோயை தனது வாயால் ஊதி குணப்படுத்திய சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது. அப்பாவி மக்களை மூளை சலவை செய்து தங்கள் விருப்பபடி ஆட்டி வைக்கும் இதுபோன்ற பாதிரியார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் ஒலித்து வருகின்றன.
இந்நிலையில், கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பொதுமக்களின் முகத்தில் புளிச்… புளிச் என்று துப்பி ஆசீர்வாதம் செய்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் லிங்க் இதோ.