கொளுந்து விட்டு எரியும் இலங்கை: ராஜபக்சே வீட்டுக்கு தீவைப்பு!

கொளுந்து விட்டு எரியும் இலங்கை: ராஜபக்சே வீட்டுக்கு தீவைப்பு!

Share it if you like it

இலங்கையில் உள்நாட்டுக் கலவரம் வெடித்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கை பிரதமர் ராஜபக்சே மற்றும் சில அமைச்சர்களின் வீடுகளுக்கும் மக்கள் தீவைத்திருக்கிறார்கள்.

இலங்கையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளில் மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதனால், ஆவேசமடைந்த மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என்று வலுயுத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டம் நேற்று உள்நாட்டுக் கலவரமாக வெடித்தது. நேற்று இரவு பிரதமர் ராஜபக்சேவின் வீட்டுக்கு தீவைத்த மக்கள், 15 அமைச்சர்களது வீடுகளிக்கும் தீவைத்தனர். தவிர, ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடாத வகையில் கொழும்பு விமான நிலையத்திலும் பொதுமக்கள் குவிந்திருக்கிறார்கள்.

இதனிடையே, இலங்கை பிரதமர் ராஜபக்சே கொழும்பிலுள்ள அவரது மாளிகையில் இருந்து வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது. இவர், வெளிநாடு தப்பிச் செல்ல ஏதுவாக விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அவரது உடல் நிலை தொடர்பாக சிகிச்சை செய்துகொள்ள வெளிநாடு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அலுவலகம், தொழிற்சாலைகள், கார்கள் போன்றவற்றையும் பொதுமக்கள் தாக்கினார்கள். தவிர, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அதிபர் கோதபய ராஜபக்சேவும் ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம் வெடித்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, கொழும்பிலுள்ள பிரதமர் மகிந்தா ராஜபக்சே வீட்டின் முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல், பிரதமரின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு, பிரதமர் பதவி விலக வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மகிந்தாவின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போராட்டக்காரர்களை மகிந்தா ஆதரவாளர்கள் தாக்கினர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் உருவானது.

இதையடுத்து, போலீஸார் மகிந்தா ஆதரவாளர்களின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர். இலங்கை அரசு ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரம் தொடர்வதால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. கலவரம் நடக்கும் இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, மகிந்தா ராஜபக்சே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் பொதுமக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நிதானமிழந்தால் வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை. அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it

One thought on “கொளுந்து விட்டு எரியும் இலங்கை: ராஜபக்சே வீட்டுக்கு தீவைப்பு!

  1. இலங்கை தமிழனை கொன்ற பாவம் சும்மா விடாது.

Comments are closed.