சென்னிமலை விவகாரம் வருத்தம் தெரிவித்த கிறிஸ்தவ பாதிரியார்

சென்னிமலை விவகாரம் வருத்தம் தெரிவித்த கிறிஸ்தவ பாதிரியார்

Share it if you like it

கடந்த வாரம் ஈரோடு பகுதியில் இருந்த சரவணன் ஜோசப் எனும் கிறிஸ்தவ பாதிரியார் ஈரோடு சென்னிமலை ஆண்டவர் கோவில் அமைந்திருக்கும் சென்னி மலையை கிறிஸ்தவ முன்னணி கைப்பற்றப் போகிறது. அங்கிருக்கும் இந்து ஆலயங்கள் அப்புறப்படுத்தப்பட்டு கிறிஸ்தவ தேவாலயம் கட்டமைக்கப்படும் . இனி சென்னிமலை கல்வாரி மலையாக அடையாளப்படுத்தப்படும் என்று பேசி இருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பாதிரியார் ஜோசப் மேடை போட்டு பொதுவெளியில் பகிரங்கமாக முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று அறைகூவல் விடுத்ததாக செய்திகள் வெளியானது. இதை அடுத்து அங்கிருந்த உள்ளூர் அமைப்புகள் ஆன்மீகவாதிகள் தேசியவாதிகள் பெரும் கொந்தளிப்புக்கு ஆளானார்கள். தமிழகத்தில் இருக்கும் இந்து ஆலயங்கள் பாதுகாப்பு விஷயங்களில் அதிக அக்கறை எடுத்து செயல்படும் இந்து முன்னணி அமைப்பின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு போகப்பட்டது. இந்து முன்னணியின் மாநில நிர்வாகிகள் உள்ளூரில் இருக்கும் இந்து அமைப்புகள் அவர்களின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கலந்தாலோசித்து பதற்றம் எழுவதற்கு முன் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சுமூகமாக மத சிக்கல்கள் எழாத வண்ணம் சென்னிமலை ஆண்டவர் கோவிலை அதன் இயல்பிலேயே பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதையொட்டி மாவட்ட மாநில நிர்வாகம் எதுவும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் நிராதரமாக விடப்பட்ட இந்து மக்கள் தன்னெழுச்சியாக இந்து அமைப்புகளின் ஆதரவோடு சென்னிமலை பாதுகாக்க தயாரானார்கள். ஈரோடு சென்னிமலை ஆண்டவர் கோவில் காலம் காலமாக தங்களின் ஆன்மீக அடையாளம். பரம்பரையாக தங்களின் முன்னோர்கள் கைங்கரியம் செய்து வழிபட்டவரும் புண்ணிய தலம் என்ற வகையில் சுற்று வட்டார மக்கள் சுமார் 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி சென்னிமலை ஆண்டவர் கோவில் பகுதியில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது சென்னி மலையை பாதுகாக்க வேண்டும் . அதன் ஆன்மீகம் கலாச்சார அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் . மதரீதியாக சென்னி மலையை அபகரிக்க நினைக்கும் முயற்சிகளுக்கு தீர்வு வேண்டும் என்ற கோஷங்கள் முன்னெடுக்கப்பட்டது.

ஈரோடு சென்னிமலை விவகாரத்தில் கிறிஸ்தவ முன்னணி என்று சொல்லிக்கொண்டு சென்னி மலையை கைப்பற்றி கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று சொன்னவர்கள் இந்த பெரிய ஆர்ப்பாட்டம் அதில் ஒன்று திரண்ட பெரும் திரளான இந்து மக்களின் தன் எழுச்சியான ஒற்றுமை சாதி கடந்து ஆன்மீக அடிப்படையில் இந்துக்களாக ஒன்றிணைந்த விவகாரம் அச்சம் கொள்ள வைத்தது. மேலும் இந்த போராட்டம் ஒரு எச்சரிக்கை மட்டுமே. இனி இது போல் சென்னிமலை விவகாரத்தில் இந்து ஆலய விவகாரத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் அத்துமீறல்கள் தொடர்ந்தால் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் என்ற இந்து அமைப்புகளின் எச்சரிக்கை எல்லாம் சேர்ந்து சென்னிமலை விவகாரத்தில் அத்துமீற முயன்றவர்களை பின்வாங்க செய்தது.

உள்ளூரில் இருக்கும் ஆலயம் அதை கைப்பற்றினால் என்னவாகும்? என்ற அசட்டையில் களமிறங்கியவர்கள் பெரிய அளவிலான மக்கள் திரண்டு போராட்டம் செய்ததில் அரண்டு போனார்கள். சமூக ஊடகங்கள் ஊடகங்களில் இந்நிகழ்வு பேசு பொருளானது. தமிழகம் முழுவதிலும் பலமாக எதிர்ப்பு கிளம்பியது. உண்மையில் இந்த விவகாரம் மாநிலத்தை கடந்து பல்வேறு மாநில அளவிலும் பேசும் பொருள் ஆனதும் தமிழகத்தில் இந்து ஆலயங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதும் ஆவணபூர்வமாக போய் சேர்ந்து விட்டது என்பதை உண்மை. இதன் முழு பின்னணியும் உணர்ந்து கொண்ட கிறிஸ்தவ அமைப்புகள் சுதாரித்துக் கொண்டு சென்னிமலை விவகாரத்தில் அப்படியே பின் வாங்கியது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஒரு பாதிரியார் தாமாக முன்வந்து சமூக ஊடகம் வழியாக ஒரு காணொளியை பதிந்திருக்கிறார். அதில் சென்னிமலை ஆண்டவர் கோவிலை ஆக்கிரமிக்க நினைத்ததும் அதை கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று பேசியதையும் அவர் கண்டித்திருக்கிறார். இதை செய்தவர்கள் அதை செய்த கிறிஸ்தவ முன்னணி உள்ளிட்ட அமைப்புகளுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அவர் தெரிவித்ததோடு இதுபோன்ற பதற்றமான நிகழ்வுகளை கிறிஸ்தவ நண்பர்கள் முன்னெடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார். இந்து ஆலயங்கள் இந்துக்கள் மீது வன்மம் வெளிப்படுத்தும் விதமான பேச்சுக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கும் அதன் காரணமாக மக்கள் மனம் புண்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டதற்கும் அவர் வருத்தம் தெரிவித்ததோடு எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்றும் தனது ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார்.

உண்மையில் இந்த பாதிரியாரின் அறிவிப்பும் அவர் கிறிஸ்தவ மதம் சார்ந்த இதர பாதிரியார்களுக்கு வழங்கிய அறிவுரையும் முழு மனதோடு வரவேற்க வேண்டியது. இதுபோன்ற சுதாரிப்புகளும் அறிவுறுத்தல்களும் தான் மதரீதியான மோதல்களையும் அச்சுறுத்தல்களையும் தவிர்ப்பதற்கு உதவும். அவ்வகையில் அந்த பாதிரியார் தனது கடமை பொறுப்பை உணர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்வுகள் இனி நடக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலையும் வழங்கி இருக்கிறார். இனி நடக்காது என்ற உத்தரவாதத்தையும் கொடுத்திருக்கிறார். அவரின் வார்த்தைகள் பலிக்கட்டும். எதிர்வரும் காலத்தில் இது போன்ற பதற்றமான சூழல்கள் உருவாகாமல் இருக்கட்டும்.

வழக்கமாக மாற்று மத மக்கள் கட்சிகள் அமைப்புகள் இந்து மக்களுக்கோ வழிபாட்டு முறைகள் ஆலயங்கள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது பாதிக்கப்படும் இந்து மக்கள் அதற்கு பெரிதாக எதிர் கருத்துக்களை கூட முன் வைப்பதில்லை. குறைந்த பட்சம் கேள்விகளை கூட எழுப்புவதில்லை. அப்படியே அபூர்வமாக யாரேனும் ஒருவர் எதிர் கேள்வியை எழுப்பினால் அந்த மாற்று மத நபருக்கு அல்லது அமைப்பிற்கு சார்பாக ஒரு பெரும் கூட்டம் வரிந்து கட்டி களம் இறங்கும். அவருக்கு போராளி அடையாளம் கிடைக்கும். கேள்வி கேட்ட அப்பாவி இந்துவிற்கு மத பயங்கரவாதி அடையாளம் கிடைக்கும். கூடவே சட்டம் தன் கடமையை செய்யும். இது தான் காலம் காலமாக இங்கிருக்கும் யதார்த்த நிலை.

இன்று சென்னிமலை ஆண்டவர் கோவில் அபகரிக்கப்படும் என்று தெரிந்தவுடன் வந்த தன்னெடுச்சியும் ஒற்றுமையும் கடந்த காலங்களிலும் இருந்திருந்தால் நம் கண் முன்னே இருநூறுக்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் இடிக்கப்படும் கொடூரம் நிகழ்ந்திருக்காது. கடந்த காலங்களில் பிரிங்கிமலை பரங்கி மலையாக மாறியதும் பாக்யா நகரம் ஹைதராபாத்தாக மாறியதும் போன்ற துரதிருஷ்டங்கள் எதிர்காலத்தில் நாமும் நம் சந்ததிகளும் எதிர் கொள்ளாமல் இருக்க வேண்டும் எனில் நம்மில் சாதி இன மொழி அடையாளம் கடந்த ஆன்மீக ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் தேவை. அந்த ஒற்றுமையும் ஒருங்கிணைப்பு மட்டுமே நம்மையும் நம் சந்ததிகளையும் நம் தர்மத்தின் வழியில் கௌரவமாக வாழ வைக்கும் இதை இங்கிருக்கும் ஒவ்வொரு சாமானியனும் உணர்வது அவசியம். இங்குள்ள ஒவ்வொரு ஆன்மீகவாதியும் தேசியவாதியும் ஒவ்வொரு சாமானிய இந்துவுக்கும் புரிய வைக்க வேண்டும்.

நடந்து முடிந்த இந்த நிகழ்வுகள் எல்லாம் நமக்கு கொடுக்கும் பாடம் ஒன்றுதான். ஒன்றுபட்ட இந்து சக்தி மட்டுமே வெல்லும். நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு என்பதை உணர்ந்து சாதி மத வேறுபாடுகளை களைந்து நம் ஆலயங்களும் ஆன்மீக மரபுகளும் நம் முன்னோர் நமக்கு அளித்த பொக்கிஷங்கள் நம் தர்மத்தின் அடையாளங்கள் அவற்றை பாதுகாத்து நம் அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது நமது தலையாயக் கடமை என்பதை உணர்ந்து அந்த தர்மத்தின் வழியில் நாமும் வாழ்ந்து நம் தலைமுறைகளையும் வழிநடத்த வேண்டியது நமது கடமை. இதை இங்குள்ள ஒவ்வொரு இந்துக்களும் உணர்ந்து கட்சி அரசியல் சாதி மதம் இனம் மொழிகளுக்கு அப்பாற்பட்டு தங்கள் மண்ணின் அடையாளங்களை பாரம்பரிய விழுமியங்களை பாதுகாப்பதில் சமரசம் இல்லாமல் ஒற்றுமையோடும் ஒருங்கிணைப்போடும் இருக்க வேண்டும் என்பதே. இதை இங்குள்ள ஒவ்வொரு ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது.


Share it if you like it