கோவில் நிலத்தில் சர்ச் – ஆட்சி மாற்றத்தால் நிகழ்ந்த விபரீதத்தை தடுத்த இந்து முன்னணி

கோவில் நிலத்தில் சர்ச் – ஆட்சி மாற்றத்தால் நிகழ்ந்த விபரீதத்தை தடுத்த இந்து முன்னணி

Share it if you like it

திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதமாற்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதேமாவட்டம் வள்ளியூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ளது. இக்கோவிலின் அறநிலையத் துறை செயல் அலுவலராக பணிபுரிந்தவர் வேலுச்சாமி.

கடந்த 2009ஆம் ஆண்டு கோவில் சொத்துக்களை கிறிஸ்தவர்கள் சட்ட விரோதமாக அனுபவிக்க அனுமதித்ததாக இவர் மீது புகார்கள் எழுந்து பலரும் கண்டனங்களை பதிவு செய்ததால் இவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு புதுக்கோட்டை கீரனூர் பகவதி அம்மன் கோவிலில் பணியமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு தனது செல்வாக்கை பயன்படுத்தி முறைகேடு புகாரில் சிக்கிய வேலுச்சாமியை வள்ளியூர் முருகன் கோவிலுக்கே மீண்டும் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு “வேலுச்சாமி, தன் பதவிக்கு ஏற்றபடி நடந்து கொள்ளவில்லை” என நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது.மேலும் இந்து முன்னணி முயற்சியால் கோவில் நிலத்தில் சர்ச் கட்டும் பணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வேலுச்சாமி நியமிக்கப்பட்ட பின்னர் சர்ச் கட்டுமானப் பணிகளைத் மீண்டும் தொடர்ந்துள்ளதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியதை அடுத்து தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share it if you like it