ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி திமுக தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கமிஷன் பிரிப்பதில் மோதல் ஏற்பட்டது. இதில் சேர்மனின் தங்கை ஹமிதா கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில்,சேர்மனின் தங்கை ஹமிதா, ஒவ்வொரு கவுன்சிலருக்கும் 10 லட்சம் 20 லட்சம் கொடுத்து சேர்மன் ஆயிருக்கேன். கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் செலவழிச்சு இருக்கேன். கமிஷனை யாருக்கும் பிரித்து கொடுக்க முடியாது என்று மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார். கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்து தான் சேர்மன் ஆனேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ள கீழக்கரை திமுக சேர்மன் இவர் மீது நடவடிக்கை எடுத்து இவரை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கமிஷன் பிரிப்பதில் கீழக்கரை திமுக சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் கிடையே மோதல் !
Share it if you like it
Share it if you like it