ஆளும் கட்சி மீது தி.மு.க. எம்.பி. பாய்ச்சல்!

ஆளும் கட்சி மீது தி.மு.க. எம்.பி. பாய்ச்சல்!

Share it if you like it

தி.மு.க. அரசின் மீது பெரம்பலூர் எம்.பி. தனது கடும் அதிருப்தியை மீண்டும் வெளிப்படுத்தி இருப்பது கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் புயலை கிளப்பி விட்டு இருக்கிறது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வராக, ஸ்டாலின் பொறுப்பேற்று ஒரு வருடத்தை நிறைவு செய்து இருக்கிறார். விடியல் கிடைக்கும் என நம்பிய மக்களுக்கு துன்பங்களும், துயரங்களும் மட்டுமே கிடைத்தது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. இதனால், தமிழக மக்கள் மட்டுமின்றி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் ஸ்டாலின் அரசின் மீது கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவராக இருப்பவர் வேல்முருகன். இவரது, கட்சி தி.மு.க.வின் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அந்த வகையில், கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வேல்முருகன் இவ்வாறு கூறினார் ; தி.மு.க. அன்று சொன்னதை இன்று மாற்றிப் பேசுவது ஏற்புடையதல்ல.

எட்டுவழிச் சாலைத் திட்டம், கோவை சூயஸ் குடிநீர் திட்டம், டாஸ்மாக் கடைகள், ஆறுபேர் விடுதலை, நீட் விலக்கு, இஸ்லாமியச் சிறைவாசிகள் விடுதலை எனப் பல வாக்குறுதிகளை தி.மு.க கொடுத்தது. முன்பு ஒன்று பேசிவிட்டு, தற்போது மாறுபட்ட கருத்தைச் சொல்வது ஏற்புடையதல்ல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனில், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உண்டாகும் என கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து, தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சி ஐ.ஜே.கே (இந்திய ஐனநாயக கட்சி). இக்கட்சியின், நிறுவனராக இருப்பவர் பாரிவேந்தர். இவர், கடந்த 2019 – ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். இதையடுத்து, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட பாரிவேந்தர் இவ்வாறு பேசினார்; “தமிழ்நாட்டில் பி.ஜே.பி, மோடி என்றால் பிடிக்கவே பிடிக்காது. அவர்களுடன் சேர்ந்து போட்டியிட்டு, 2 லட்சம் வாக்குகளை பெற்றேன். அதே நேரத்தில் இன்று ஆண்டுக் கொண்டிருக்கிற கட்சி 2.40 லட்சம் வாக்குகள் பெற்றார்கள். நினைத்து பார்கிறேன்.

நான் சற்று அவசரப்பட்டு விட்டேன். போகாத இடத்துக்கு சென்றிருக்க வேண்டாம். தனியாக நின்றிருந்தால் கூட நிச்சயம் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருப்பேன். இதை நினைத்து வருந்துகிறேன். எம்.பி. பதவி எனக்கு பெருசு கிடையாது. எப்போது, வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம் என தெரிவித்துள்ளார். இவரின், கருத்து கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே, எம்.பி. பதவி எனது அடையாளத்தின் சிறு துளி. இதற்காக, நான் போகாத இடத்திற்கு போய் இருக்க கூடாது. கூட்டணியில் சேர்ந்ததை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன் என கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


Share it if you like it