உக்ரைனில் படித்து வரும் தமிழக மாணவர்கள் தப்பி தவறி கூட முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி விட வேண்டாம் அது உங்கள் உயிருக்கு ஆபத்து என சமூக ஆர்வலர் ஒருவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த பிப் 15-தேதி உக்ரைனை விட்டு வெளியேறுமாறு, இந்தியர்களுக்கு மோடி தலைமையிலான அரசு வலியுறுத்தி இருந்தது. மேலும், பல்வேறு நடவடிக்கைகளை இன்று வரை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ள ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் குடியரசு மற்றும் ருமேனியாவின் வழியாக இந்தியர்களை அழைத்து வந்து. அங்கிருந்து விமானம் மூலம் இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசுக்கு உதவி செய்யாமல். வழக்கம் போல, ஸ்டாலின் தலைமையிலான அரசு ஸ்டிக்கர் ஒட்டி வரும் இச்சூழலில், தமிழக மாணவர்கள் தப்பி தவறி கூட தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரை உக்ரைனில் பயன்படுத்தி விட வேண்டாம். அது உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடு ஏன்? என்ற காரணத்தையும் அவரே கூறியுள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
GOOD WORK