தமிழக முதல்வர் ஸ்டாலின் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் ரூ. 3 கோடி இருக்கும் என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அணிந்திருக்கும் வாட்ச் ரூ. 5 லட்சம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இதையடுத்து, இச்சம்பவம் பொதுமக்களிடையே பேசுப்பொருளாக மாறியிருந்தது. அந்த வகையில், எனது கைகடிக்காரத்திற்கான பில்லை ஏப்ரல் மாதம் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடுவேன் என பகீரங்கமாக அண்ணாமலை கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து, பிரபல எழுத்தாளர் மாரிதாஸ், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் உள்ளிட்டவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் அணிந்திருக்கும் வாட்ச், பெல்ட், உடை மற்றும் காலணிகளின் விவரத்தை மக்கள் முன்வைத்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த தி.மு.க.வின் ஊடகங்கள், பத்திரிகைகள், ஊடக நெறியாளர்கள் அண்ணாமலை வாட்ச் குறித்து பேசுவதை தவிர்த்து வந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கையில் அணிந்துள்ள ரிச்சர்ட் மில்லே ஆர்.எம். 067-01 ரோஸ் கோல்ட்டின் விலை ரூ. 2.75 முதல் 3 கோடி வரை இருக்கும். கடந்த, 2022 – ஆம் ஆண்டு ஜனவரி 1 – ஆம் தேதியிலிருந்து அக்கடிகாரத்தை தனது கையில் அணிந்துள்ளார். இதுகுறித்தான, புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார் என சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளார்.