‘மீ டூ’ புகழ் வைரமுத்துவுக்கு ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து… வசைபாடிய பாடகி சின்மயி!

‘மீ டூ’ புகழ் வைரமுத்துவுக்கு ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து… வசைபாடிய பாடகி சின்மயி!

Share it if you like it

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அவரை வாழ்த்தி இருப்பதை, பாடகி சின்மயி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

பாடகி சின்மயி தொடர்ந்து வைரமுத்துவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். ஆனால், தமிழக அரசு கண்டுகொள்ளாததோடு, வைரமுத்துவுக்கு எழுத்தாளர்களுக்கான வீடு ஒதுக்கி கவுரவித்தது. இதற்கும் சின்மயி கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், இன்று வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, பெசன்ட் நகரிலுள்ள அவரின் வீட்டிற்கே சென்று முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முதல்வரின் இச்செயலை பாடகி சின்மயி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஒரு மனிதனின் பிறந்தநாளுக்கு முதல்வரே நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். MeToo இயக்கத்தின் மூலம் இக்கவிஞர் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதற்காக, பல விருதுகளை பெற்ற பாடகியும், டப்பிங் கலைஞருமான நான், 2018-ம் ஆண்டு முதல் தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்ற முடியாமல் தடையை எதிர் கொண்டு வருகிறேன். 5 ஆண்டுகள் ஓடிவிட்டன சட்டப்பூர்வ நடைமுறையே உங்கள் பெரிய தண்டனை.

நியாயம் கேட்க உனக்கு எப்படி துணிச்சல் வருகிறது? என்று அவர்கள் கேட்பது போல் உள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்னர் பிறந்த அந்த கவிஞர் எந்த பெண்ணின் மீதும் கை வைக்கலாம் என்று முடிவு செய்தார், பல அரசியல்வாதிகளுடன் குறிப்பாக தி.மு.க.வுடன் உள்ள நெருக்கத்தால், தான் துஷ்பிரயோகம் செய்த பெண்களை மிரட்டினார். அவர் பல பத்ம விருதுகள் மற்றும் சாகித்ய நாடக அகாடமி விருது மற்றும் பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இந்த மனிதனின் பவர் இதுதான்.

நானும் பல பெண்களும் இதற்கு முன்பு ஏன் பேசவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுவது அவமானம். வைரமுத்துவை பற்றி பேசும்போதெல்லாம் அவர்கள் அமைதியாகி விடுவார்கள். இங்கே பாலியல் குற்றவாளிகளைக் கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கம் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள். இந்த மனிதர்களை அரசியல்வாதிகள் பாதுகாப்பார்கள். இந்த நிலத்தில் இல்லாத நீதி என்ற மந்திர யுனிகார்ன் விஷயத்தை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்” என்று தனது குமுறலை கொட்டி இருக்கிறார்.


Share it if you like it