பிப்ரவரி 14 கோவையைப் பொறுத்தவரை, ஒரு கறுப்பு தினம். 1998 பிப்ரவரி 14 அன்று, குண்டு வெடிப்புக் சம்பவம் இந்தியாவையே புரட்டி போட்டது. நான்கு நாட்களில் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கான மதிப்பில் பொருள்சேதம் ஏற்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எல்.கே.அத்வானி கோவை வருகிறார். பி.ஜே.பி வேட்பாளார் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்துப் பேச வந்த எல்.கே.அத்வானிக்காக, கோவை ஆர்.எஸ்.புரத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் தயாராகிக்கொண்டிருந்தது. அவரின் விமானம் அரைமணி நேரம் தாமதமாக வந்ததால் அவருடைய உயிர் தப்பியது. இந்த சம்பவமானது கோவை மக்களால் மறக்க முடியாத வடுவாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கோவை குண்டுவெடிப்பிற்கு திமுக அரசு உடந்தையாக இருந்துள்ளதாக இந்து முன்னணி பரப்பரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
தேசிய லீக் கட்சியை சேர்ந்த புவனகிரி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ, ஏவி அப்துல் நாசர் என்பவர், “கோவை குண்டுவெடிப்பில் எனது சாட்சியம்” என்ற நூலில், 1998 குண்டுவெடிப்பு குறித்து திமுகவிற்கு முன்பே தெரியும் என்று எழுதியுள்ளார்.
வன்முறையாளர்கள் குண்டுவெடிப்பில் ஈடுபட பொருள்கள் தயாரித்ததும் உளவுத்துறைக்கு தெரிந்து முன்பே அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதைக் கண்டும் காணாதுமாக திமுக அரசு செயல்பட்டதே, கோவை குண்டு வெடிப்பின் காரணம் என அந்த நூலில் அவர் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
உண்மையை பல நாள் மறைக்க முடியாது. திமுகவின் இன்றைய நிலை அதோகதி தான்…
https://x.com/hindumunnani_tn/status/1772962234412548249?s=20