என்னா பெரிய தெர்மாகோல்… பேக்கிங் டேப் தெரியுமா? செல்லூர் ராஜூவை மிஞ்சிய நெடுஞ்சாலைத் துறை..!

என்னா பெரிய தெர்மாகோல்… பேக்கிங் டேப் தெரியுமா? செல்லூர் ராஜூவை மிஞ்சிய நெடுஞ்சாலைத் துறை..!

Share it if you like it

பக்கவாட்டில் சரிந்து விழுந்த மேம்பாலத்தை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பேக்கிங் டேப் போட்டு ஒட்டியிருக்கும் சம்பவம் நகைப்புக்கள்ளாகி இருக்கிறது.

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது, செங்கிப்பட்டி அருகேயுள்ள சானூரப்பட்டி முதன்மை சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம், சானூரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தெற்கு பகுதியின் பக்கவாட்டு சுவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சரிந்து விழுந்தது. தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இதையடுத்து, மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சரிந்து விழுந்த பகுதியை சீரமைக்கும் பணிகள் நடந்தன. அதன்படி, மீண்டும் கான்கிரீட் சிலாப்கள் வைத்து மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் அடைக்கப்பட்டது. ஆனால், கான்கிரீட் சிலாப்கள் மீண்டும் சரிந்து விழுந்து விடாமல் இருக்க, பேக்கிங் டேப் போட்டு ஒட்டி இருப்பதுதான் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. வைகை அணையில் தெர்மாகோல் போட்டு தண்ணீர் ஆவியாவதை தடுக்க முயற்சித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் செயலை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மிஞ்சி விட்டதாக கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it