தகரும் திராவிட மாயை – அம்பமாகும் அரக்கு மாளிகை அரசியல் – மாற்றத்திற்கு தயாராகும் தமிழகம் !

தகரும் திராவிட மாயை – அம்பமாகும் அரக்கு மாளிகை அரசியல் – மாற்றத்திற்கு தயாராகும் தமிழகம் !

Share it if you like it

மக்களின் மனதை மயக்கி தேர்தல் என்று வரும்போது நாங்கள் எப்படி விலை பேசி வாங்க வேண்டும்? என்ற மந்திரம் எங்களுக்கு தெரியும் என்று ஒரு பெரிய திராவிட தூண் மேடையில் முழங்கினார். அதன்படி எனது தொகுதியிலேயே 100க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களை எடுத்து இருக்கிறேன். இதையெல்லாம் தேர்தலில் எதிரொலிக்கும் என்று தெரியும். ஆனால் அதை எல்லாம் மறக்கடித்து எப்படி வாக்குகளை கவர வேண்டும்? என்ற யுக்தி எனக்கு தெரியும் என்று இறுமாப்புடன் அவர் பேசியது இங்கு பலரையும் உலுக்கியது. அதன் பின்னணி என்ன? என்பது ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் கண்கூடாக வெளிப்பட்டது. ஆமாம் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை எந்த அதிருப்தி எதிர்ப்பு அலையையும் தேர்தல் நேரத்தில் மறக்கடித்து வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு சில நூறு ரூபாய்களை அள்ளி வீசினால் போதும் என்ற இறுமாப்பு அவர்களிடம் இருந்தது. பணம் பரிசுப் பொருள் கறிசோறு கைக்காசு என்று தங்களால் இயன்ற அத்தனையும் செய்யும் சக்தி இருக்கும் வரை தங்களை மீறி இங்கு யாரும் அரசியலில் கோலோச்ச முடியாது என்பதை கண்கூடாக ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அவர்கள் நிரூபித்தார்கள்.

பத்தாண்டு காலமாக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கட்சிக்கு கடன் வாங்கி செலவு செய்தோம். இன்று இரண்டு ஆண்டு காலமாக ஆளும் கட்சியாக இருந்து கூட நாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத நிலையில் இருக்கிறோம். எவ்வளவு வருமானம் வந்தாலும் அத்தனையும் தலைமை குடும்பத்திற்கே போகும் என்றால் நாங்கள் எப்படித் தான் வாங்கிய கடனை தீர்ப்பது? மேற்கொண்டு கட்சிக்கு எப்படி செலவு செய்வது? எதிர்வரும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை வைத்து சட்டையை பிடிக்கும் கட்சி தொண்டர்கள் ஒருபுறம். இதுவரையில் சுருட்டியதை பாதுகாக்க வேண்டும் . இனி நம் குடும்பமும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பிக்க வேண்டும். எனில் அதற்கு நாம் என்ன செய்யலாம்? தலைமையை என்ன செய்ய வைக்கலாம்? என்று இருக்கும் இரண்டாம் கட்ட தலைமைகள் ஒரு புறம். இரண்டிற்கும் நடுவில் சொந்த குடும்பமே எப்போது எந்த சிக்கலை எடுத்து வருமோ? அல்லது எந்த சட்ட சிக்கலில் அவர்கள் சிக்கிக் கொள்வார்களோ? என்ற அச்சத்தின் திமுகவின் தலைமையும் அதன் தலைமை குடும்பமும் விழி பிதுங்கி நிற்கிறது.

கட்சித் தொண்டர்களோ எதிர்க்கட்சியாக இருந்த போது கூட கெத்தாக வலம் வந்தோம். ஆனால் இரண்டு ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து கூட சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. இனியும் நிலைமை மாறும் என்ற நம்பிக்கை இல்லை. நடப்பதை எல்லாம் பார்த்தால் கட்சியே காலாவதியாகிவிடும் போல இருக்கிறது. அதனால் கிடைத்தவரை சுருட்டுவது லாபம். முடிந்தவரை நாம் எந்த வம்பு வழக்கிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது உத்தமம்.என்ற‌ நிலையில் இருக்கிறார்கள். காரணம் சிக்கிக்கொண்ட பெருந்தலைகளை தப்பிக்கும் வழி தெரியாமல் தத்தளிக்கிறது. அவர்களை மீட்கவே வழி தெரியாமல் தலைமை குடும்பம் கையை பிசைந்து நிற்கிறது. உண்மையை சொன்னால் தலைமை குடும்பத்தின் நிலையே என்னவாகும் ? என்ற அச்சம்தான் திரும்பிய பக்கம் எல்லாம் பேச்சாக இருக்கிறது. இதற்கிடையில் நம் போன்ற சாதாரண தொண்டனுக்கு சிக்கல் என்றால் யார் வரப்போகிறார்கள்?. அதனால் கிடைத்தவரை லாபம். இருக்கும் வரை போதும் என்ற மனநிலைக்கு சாதாரண தொ(கு)ண்டர்கள் வந்து விட்டார்கள்.

இரண்டாம் கட்ட தலைவர்களும் சுருட்டியதை பாதுகாக்க வேண்டும் . இனி எந்த சட்ட நடவடிக்கைகளும் தம்மை முடக்காமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் . எந்த விலையில் கொடுக்க தயார் என்ற நிலையில் தங்களின் சுயநலம் ஒன்றே குறியாக செயல்பட இவர்களே கட்சியின் தலைமை குடும்பத்திற்கும் கட்சிக்கும் முடிவுரை எழுதி விடுவார்களோ? என்ற அச்சத்தில் கட்சியின் மேல் மட்டமும் தலைமை குடும்பமும் பரிதவிக்கிறது. ஆனால் இவையெல்லாம் ஒரு புறம் வரிசை கட்டி நின்றாலும் சட்டமும் தேசிய பாதுகாப்பு முகமைகளும் அதன் வழியில் என் கடன் பணி செய்து கிடப்பதே என்னுடைய பணியில் எவரும் தலையீடு செய்ய முடியாது என்று அதிரடி காட்டி வருகிறது. வருமான வரித்துறை சோதனைக்கு வந்தால் அடித்து அராஜகம் செய்து வன்முறையை கட்டவிழ்த்து விடுவீர்கள். என்றால் அடுத்து வரும் அமலாக்கத்துறை துணை ராணுவ பாதுகாப்போடு களம் இறங்குகிறது . முடிந்தால் மோதி பாருங்கள் என்று அதிரடி காட்டியது. அதில் ஆடி போனவர்கள் இன்று வரை இருக்கும் இடம் தெரியவில்லை.

இவ்வளவு நடந்த பிறகும் கூட குப்புற விழுந்தாலும் என் மீசையில் மண் ஒட்டவில்லை பாருங்கள் என்று எப்பொழுதும் இதெல்லாம் பழி வாங்கும் நடவடிக்கை அரசியல் அராஜகம் எதிர்க்கட்சிகளை முடக்கம் செயல் என்று வாய்கிழிய பேசுகிறார்களே தவிர ஒரே ஒருவர் கூட நாங்கள் நேர்மையாளர்கள். எங்களின் மீது எந்த தவறும் இல்லை . இந்த சொத்துக்கள் எல்லாம் எங்களுடையது இல்லை என்று யாரும் சொல்வார் இல்லை. மாறாக இந்த சொத்துக்கள் எல்லாம் எங்களுடையதுதான். நாங்கள் இந்த வகையில் இதையெல்லாம் சம்பாதித்தோம். இதற்கான உரிய கணக்கு வழக்கு எங்களிடம் இருக்கிறது. எதையும் சட்டப்படி சந்திப்போம் என்று துணிச்சலாகவும் பேசவில்லை. மாறாக சொல்லி வைத்தார் போல பாசிசம் ஆரியம் பார்ப்பனம் என்று வழக்கமான கட்டுக்கதை அரசியலை தான் கையில் எடுக்கிறார்கள். இது ஒன்றிலிருந்து இத்தனை காலம் நடந்தது என்ன? இப்போது நடந்து கொண்டு இருப்பது என்ன ? என்பதை மக்களும் ஓரளவு கணிக்கத் தொடங்கி விட்டார்கள்.

தேர்தல் வந்தால் கறிசோறு பொட்டலம் கை காசு ஆண்களுக்கு மதுபான குப்பிகள் பெண்களுக்கு குழுக்கள் என்ற ஆசை வார்த்தை . அதையும் கடந்து கூட்டம் கூட பணம் வாக்களிக்க பணம் வெற்றி பெற்றால் இது இலவசம் இது இலவசம் என்று பசியில் அழும் குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் காட்டி ஏமாற்றுவதை போல தேர்தல் நேரத்தில் தங்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்பவர்கள். தங்களின் அந்த வாக்குரிமை என்ற அஸ்திரத்தை கொண்டு எத்தனை கோடிகளை குவித்து இருக்கிறார்கள்? என்பதை பார்த்து வாக்களித்த மக்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓயாமல் உழைத்தாலும் தங்களின் மொத்த வருமானம் குழந்தைகளின் கல்வி அன்றாட வாழ்க்கை செலவு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கே போதாத நிலையில் சேமிப்பு என்பது எட்டாக்கனியாகி விட்டது . எதிர்கால பாதுகாப்பு என்பதெல்லாம் கேள்விக்குறியாக இருக்கும்போது சில நூறு தாள்களை கொண்டு தங்களின் வாக்குரிமைகள் விலைபேசி வாங்கியவர்கள் லட்சம் கோடிகளில் புரளும் சொத்து பட்டியல் வெளியியாவதும் அவர்கள் பல கோடி மதிப்பிலான கார்களில் உலா வருவதையும் பார்த்து வயிறு எரிந்து நிற்கிறார்கள்.

யாரோ ஒரு சில குடும்பம் கோடிகளின் புரள தங்களின் குடும்பங்கள் எல்லாம் நிராகரமாக வீதியில் நிறுத்தப்பட்ட கொடுமைகளை அவர்கள் தற்போது தான் உணர தொடங்கி இருக்கிறார்கள். இத்தனை காலமும் தாங்கள் அனுபவித்த சாபக்கேடான வாழ்க்கை தங்களின் விதி வழியில் வந்ததல்ல . தங்களின் அரசியல் அறியாமையை பலவீனமாக்கி அதை அவர்களின் பலமாக மாற்றி தங்களின் வாக்குகளை ஏமாற்றி வாங்கியவர்களின் சூழ்ச்சிக்கு நாம் மதி மயங்கியதின் பலனாக நாம் அனுபவிக்கும் கொடுமைகள் தான் நாமும் நம் தலைமுறைகள் அனுபவிக்கும் பொருளாதார சமூக அரசியல் நெருக்கடிகள் எல்லாமே என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு வேண்டும். அதற்கு தேவையானவற்றை செய்ய நாமும் தயாராக வேண்டும் என்று அவர்கள் துணிந்து விட்டது தான் ஒரு மாபெரும் தேசிய எழுச்சிக்கும் ஆன்மீக எழுச்சிக்கும் அவர்கள் தயாராகிவிட்டது. நெடுங்காலமாக அதிகாரக் கொள்ளை அரசு இயந்திரங்களின் மீதான அதிருப்தி நம்பிக்கையில் விரக்தியின் விளிம்பில் இருந்த தமிழகம் நேர்மையான அரசியல் லஞ்சம் ஊழல் இல்லாத அரசு எந்திரங்கள் தகுதி திறமைக்கு வாய்ப்பளிக்கும் உண்மையான மக்களாட்சி என்று அவர்களின் நீண்ட கால கனவுகள் காத்திருப்புகளை எல்லாம் தங்களின் கண் முன்னே ஒருவர் தனது கட்சியின் கோட்பாடாக கொள்கையாக பேசும் போது அவர்கள் அப்படியே தம்மை மறந்து அந்த தலைமையின் பின் அணிவகுக்கத் தொடங்கி விட்டார்கள்

இனி எந்த காலத்திலும் தங்களின் அதிகாரக் கொள்ளையும் லஞ்சம் ஊழல் என்ற கட்டமைத்த அரசு இயந்திரமும் இனி நிலைக்காது. அதை வைத்து இனி நாம் காலம் தள்ளவும் முடியாது என்ற நிலையில் எதை தின்றால் பித்தம் தெளியும்? என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சட்டம் காலம் கடந்தேனும் தனது கடமையை சரியாக செய்யும் . காலம் நேரம் தாழ்த்தியேனும் தனது தீர்ப்பை தருமத்தின் வழியில் சரியாக வழங்கும். அதன் மூலம் இந்த அதிகார கொள்ளைகளுக்கு எல்லாம் ஒரு நிரந்தர முடிவு வரும் நாமும் நம் சந்ததிகளும் எதிர்காலத்தில் இந்த மண்ணில் நேர்மையான அரசியல் தேசியவாத அரசியல் களம் அதன் மூலம் உண்மையான மக்களாட்சி அனுபவிக்க முடியும். இன்று இதுவரையில் நம் தலைமுறைகள் கண்ட கொடுமைகள் எல்லாம் நம்மோடு முடிந்து எதிர்வரும் தலை முறைகளாவது நேர்மையாக கண்ணியமான வாக்காளர்களாக அதன் மூலம் நேர்மையான ஆட்சியாளர்களை உருவாக்கி ஒரு வளமான வாழ்வை வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு தமிழகம் காத்திருக்கிறது.


Share it if you like it