சர்ச்சுக்கு வா, ஞானஸ்தானம் எடு என்று கூறி கல்லறைக்கு பூட்டு போட்ட கிறித்துவ சபையினர் !

சர்ச்சுக்கு வா, ஞானஸ்தானம் எடு என்று கூறி கல்லறைக்கு பூட்டு போட்ட கிறித்துவ சபையினர் !

Share it if you like it

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள விக்கிரவாண்டி என்னும் பகுதியில் அதிர்ச்சிகரமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. விக்கிரவாண்டி பகுதியில் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி வயது 79. இவர் உடல்நிலை சரியில்லாத காரணமாக கடந்த புதன்கிழமை இறந்துள்ளார். இதனால் இறந்தவரை அப்பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்துவ கல்லறையில் புதைப்பதற்காக இறந்தவரின் சடலத்தை உறவினர்கள் எடுத்து சென்றபோது கல்லறையில் புதைக்கக்கூடாது என்று கிறித்துவ கத்தோலிக்க சபையினர் கல்லறையினை பூட்டிவிட்டு, இந்த கல்லறையானது கத்தோலிக்க சபைக்கு சொந்தமானது. இதனால் வேறு கிறிஸ்துவ சபையை சேர்ந்தவர்கள் இங்கு வந்து அடக்கம் செய்ய முடியாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த கல்லறையில் தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றால், இறந்தவரின் குடும்பங்கள் அனைவரும் ஒரு வெள்ளைத்தாளில் கையெழுத்திட்டு, கத்தோலிக்க சபைக்கு மாறி வாருங்கள் மற்றும் எங்கள் கத்தோலிக்க மதபோதகரிடம் ஞானஸ்தானம் எடுக்க சொல்லுங்கள். அதன்பிறகு அனுமதிக்கிறோம் என்று கத்தோலிக்க சபையினர் கூறினர். ஆனால் இறந்தவரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சிலர் அந்த கல்லறையில் தான் புதைப்போம் என்று மல்லுக்கட்டி உள்ளனர். உடனடியாக தகவல் அறிந்த தாசில்தார் யுவராஜ், காவல்துறை துணை ஆய்வாளர் மருது துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் தெய்வீகம், கிராம நிர்வாக அலுவலர்களான ஸ்ரீதர், அண்ணாமலை ஆகியோர் அங்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் வருவாய் பதிவேட்டில் சம்பந்தப்பட்ட பகுதியானது சமாதி என்றுதான் உள்ளது என்று அதிகாரிகள் கூறி கல்லறையை திறந்து வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Share it if you like it