இங்கிலாந்தில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் இந்தியா அபார சாதனையை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் 22-வது காமன் வெல்த் விளையாட்டு போட்டி, கடந்த ஜூலை 28-ஆம் தேதி துவங்கியது. இதில், நீச்சல், பேட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஸ்குவாஷ் மற்றும் ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், 72 நாடுகளை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். கடந்த முறை நடைபெற்ற காமன்வெல்த் போட்டியை காட்டிலும், இம்முறை அதிக பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
அந்த வகையில், டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை பெற்றுள்ளனர். இதையடுத்து, மல்யுத்தம், குத்துச்சண்டை உள்ளிட்டவற்றில் இந்தியர்கள் தங்களது முத்திரையினை பதிவு செய்து இருக்கின்றனர். இதுதவிர, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் நமது வீரர்கள் பதக்கங்களை வென்று உள்ளனர்.
காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழாவான இன்று தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் குத்துச் சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் ஆகிய இருவரும் தேசிய கொடியை ஏந்தி செல்ல இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று 4 இடத்தை இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.