கம்யூனிஸ்ட்களின் வாக்கு சதவீதம்: பிரபல அரசியல் விமர்சகர் கருத்து!

கம்யூனிஸ்ட்களின் வாக்கு சதவீதம்: பிரபல அரசியல் விமர்சகர் கருத்து!

Share it if you like it

உ.பி. மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில். கம்யூனிஸ்ட்கள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்து பிரபல அரசியல் விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளார்.

2014 பிறகு இந்தியாவில் நடைபெற்று வரும். அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பாலும் தோல்வியையே இன்று வரை தழுவி வருகிறது. தற்பொழுது வெறும் இரண்டு மாநிலங்களில் மட்டுமே, காங்கிரஸ் நேரடியாக ஆட்சியை நடத்தி வருகிறது. அது, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் ஆகும். மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி. பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு, தொடர் தோல்விகளை அக்கட்சி தழுவி வருகிறது. காங்கிரஸ் போல, ஒரு காலத்தில் பெரிய கட்சியாக இருந்த கம்யூனிஸ் கட்சி. இன்று, கேரளாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நாடே எதிர்பார்த்து காத்திருந்த, 5 மாநில சட்டமன்ற, தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகியது. மணிப்பூர், கோவா, உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், 5.க்கு 4 இடங்களில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சிக்கு வழக்கம் போல படுதோல்வி ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், உபி. பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில். கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்து பிரபல அரசியல் விமர்சகர் ஜே.வி.சி ஸ்ரீராம் தனது கருத்தை வெளியிட்டு உள்ளார்.

மாநிலங்கள் வாரியாக கம்யூனிஸ்ட்கள் பெற்ற வாக்கு சதவீதம்.

உத்தரப்பிரதேசம்.

சிபிஐ : 0.07% சதவீத வாக்குகள்.

சிபிஐஎம் : 0.01%

மணிப்பூர்
CPI : 0.06%

உத்தரகாண்ட்
CPI : 0.04%
CPIM : 0.04%

பஞ்சாப்
CPI : 0.05%
CPIM : 0.03%

கேரளாவை தவிர்த்து மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில். கம்யூனிஸ்ட்கள் நோட்டோ உடன் போட்டி போட்டு கொண்டு இருக்கும் இச்சூழலில். அருணன், சுந்தவரவள்ளி, போன்றவர்கள் பா.ஜ.க-வை பார்த்து கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it