ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பேசுகையில், உலக அரசு குறித்த தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், உலகளாவிய துன்பங்கள் தொடர்கின்றன. மேலும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் போன்ற நெருக்கடிகளை அவர் சுட்டிக்காட்டினார். அதிகரித்த தொழிநுட்ப வசதிகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் இருந்தபோதிலும், மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, அவர் குற்றங்களின் அதிகரிப்பைக் குறிப்பிட்டார், நவீனமயமாக்கல் மற்றும் வளர்ச்சிக்கு முகங்கொடுக்கும் சிக்கலான உலகளாவிய சவால்களை சுட்டிக்காட்டினார்.
ஜம்முவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கூட்டம் அக்டோபர் 15 ஆம் தேதி நடந்துள்ளது. அதில் 2025 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பானது தொடங்கி 100 வது ஆண்டு விழா நடத்தப்போவது குறித்து அக்கூட்டத்தில் விவாதித்துள்ளனர். மேலும் கிராம மேம்பாடு,சேவை,பொது விழிப்புணர்வு,நீர் பாதுகாப்பு,சமூக சமத்துவம்,கல்வி ஆகிய துறைகளில் ஜம்மு காஸ்மீரில் தொடங்கியுள்ள பல்வேறு திட்டங்களை குறித்தும் விதித்துள்ளார்.