இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி – வன்மத்தோடு விமர்சிக்கப்படும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்

இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி – வன்மத்தோடு விமர்சிக்கப்படும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்

Share it if you like it

தற்போது பாரதத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான தொடர்கள் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான நேரடி போட்டி நடந்தது. இந்தப் போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் கண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் சுணக்கம் காட்டினாலும் பின்னர் சுதாரித்த இந்திய அணி அசுரத்தனமான வெற்றிவாகை சூடியது.

இந்தப் போட்டியில் இந்திய வீரர்களும் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களும் வெற்றி பெற்ற பிறகு மொத்தமாக எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செய்தது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது . இதனிடைய போட்டியின் இடையே பாகிஸ்தான் வீரர் ஒருவர் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பும் போது இந்திய அணியினரும் ரசிகர்களும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர். இந்த கோஷம் எதிரணியை அவமதித்து புண்படுத்தியதாக சர்ச்சையாக்கி பலரும் மலிவாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள வந்த பாகிஸ்தான் அணி சார்ந்த வீரர் இடம் ஒருவர் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டபோது கொஞ்சம் பொறுங்கள் இன்றைய விளையாட்டில் ஐந்து இந்திய விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டு வந்து பெருமிதத்தோடு உங்களுக்கு முழு புகைப்படமே எடுத்துக் கொடுக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது அவரின் தன்னம்பிக்கை. தன் தேசம் வெற்றி பெற வேண்டும். அதற்கு தன்னுடைய முழு பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற நம்பிக்கை நல்லெண்ணம்.‌ அதை இந்த நிமிடம் வரை இந்திய கிரிக்கெட் அணியும் அல்லது இந்திய ரசிகர்களும் குற்றப் படுத்தவில்லை. அதே பாகிஸ்தான் அணியினர் மைதானத்தில் அவர்களின் மத வழக்கப்படி கும்பலாக தொழுகை செய்த போது யாரும் அதை அவமதிக்கவும் கேள்வி எழுப்பவோ இல்லை. மாறாக அந்த சில நிமிடங்கள் அவர்களின் தொழுகைக்கு இடையூறு இல்லாமல் ஒட்டுமொத்த மைதானமும் அமைதி காத்தது. இதில் எல்லாம் யாருக்கும் எந்த சர்ச்சையும் இல்லை. இவையெல்லாம் அவர்களுக்கு சாதாரண விஷயங்கள்.

ஆனால் அதே மைதானத்தில் இந்தியாவில் ஐந்து விக்கெட்டுகளை விளித்துவேன் என்று சொன்னவர் தோல்வி அடைந்து தனது விக்கெட்டை தக்க வைக்க முடியாமல் பெவிலியன் திரும்பும் போது இந்திய அணியினரும் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டது மதவெறியாக விமர்சிக்கப்படுகிறது. மைதானத்திலிருந்து வெளியேறும் வரை ஒரு சில விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று விளையாட்டு விஷயங்களில் நியதிகள் உண்டு. ஆனால் அதில் விதிவிலக்காக பாகிஸ்தான் அணியினர் மைதானத்தில் தொழுகை நடத்தும் போது இந்திய அணியினர் ரசிகர்களும் அதை ஒரு விஷயமாக மாற்றாமல் அமைதி காத்தார்கள் ..ஆனால் பகை நாட்டில் இருந்து வந்து கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு இருக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும் சொந்த நாட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்கும் ரசிகர்களுக்கும் மறுக்கப்படுவது தான் இங்கு மத நல்லிணக்கம் பேசுவோரின் உண்மை முகம்.

கடந்த ஆண்டுகளில் துபாய் உள்ளிட்ட எத்தனையோ நாடுகளில் இந்திய அணியினர் தோல்வியுறும்போது அங்கெல்லாம் அவர்களின் மத வழக்கப்படி விண்ணத்திலும் கோஷங்கள் எழுந்தது அதை இந்திய அணியின் வீரர்களோ இந்திய ரசிகர்களோ ஒருபோதும் குற்றமாக பேசியது இல்லை. காரணம் உண்மையான ஆன்மீக பற்றுதல் இருப்பவர்கள் தங்களின் வெற்றி தோல்வி இரண்டிலும் இறைவனையே நினைப்பார்கள் . அந்த வகையில் அப்போது வெற்றி பெற்றவர்கள் அதை அவர்களின் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தார்கள். தற்போது இந்திய அணியினர் வெற்றி பெற்றதை இங்குள்ள அணி வீரர்களும் ரசிகர்களும் அவர்களின் இறைவனுக்கு அதை அர்ப்பணிக்கிறார்கள் இதில் எங்கிருந்து வருகிறது மதவெறி?

விளையாட்டு மைதானங்களில் மத அடையாளங்கள் வழிபாடுகள் வரக்கூடாது என்றால் அதை ஒரு கட்டுப்பாடாக விதியாக மாற்றட்டும். அதை அனைவருக்கும் பொதுவான நடைமுறையாக மாற்றட்டும் . அதையும் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை ‌ ஆனால் வழிபாட்டு சுதந்திரம் மத உரிமை என்பதெல்லாம் ஒரு சாராருக்கு மட்டும்தான் பக்தியாக இருக்கும். இன்னொரு சாராருக்கு அது மத வெறியாக கட்சி அரசியல் சாயமாக பூசப்படும் எனில் உண்மையில் அதுதான் மதவெறி . மத துவேஷம் ஒரு சார்பு நிலை .அதில் பாதிக்கப்படுபவர்கள் அதை எதிர்த்து கேட்கத்தான் செய்வார்கள். அதை முடக்க நினைப்பவர்கள் அதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

வெற்றி பெற்றவன் தனது இறைவனின் நாமத்தை சொல்லி கோஷம் இடுவது எப்படி எதிர் தரப்பை அவமதிப்பதாக இருக்கும்? ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்ற போது அவர்களின் இறைவன் பெயரைச் சொல்லி கோஷமிடுவது உண்மையில் பக்தியின் அடையாளத்தில் இல்லையா ? எதிர் தரப்பை அவமதிக்க வேண்டும். துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அது செய்யப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியானால் இங்கு ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டவர்களுக்கு அமைதி சகிப்புத்தன்மை மதம் நல்லிணக்கம் பற்றி பாடம் எடுப்பவர்கள் அவர்களின் மனசாட்சியை கேட்கட்டும்.

மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் இந்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை எதிர்க்கவோ விமர்சிக்கவோ இல்லை. நாம் வெற்றி பெறும்போது நம் இறைவனின் நாமம் சொல்லப்படுவது போல் எதிர் தரப்பினர் அவர்களின் வெற்றியை அவர்களின் இறைவன் நாமத்தின் வழியில் கொண்டாடுகிறார்கள் என்று அமைதியாக தான் கடந்து போகிறார்கள். ஆனால் உள்ளூரில் வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு சார்பு ஆதரவு நிலையையும் ஒரு சார்பு வஞ்சக நிலையையும் முன்னெடுக்கும் அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவில் வயிறு வளர்க்கும் போராளிகளும் ஆர்வலர்களும் தான் இந்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை கண்டு பதட்டம் அடைகிறார்கள். அவர்கள் தான் அவர்களின் ஒரு சார்பு நிலையை மத நல்லிணக்கமாக நிலை நிறுத்துவதற்காக ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் விட்டவர்களையும் அதன் ஆதரவாளர்களையும் வெறுப்புணர்வோடு மத அடையாளத்தோடும் விமர்சனம் செய்து வருகிறார்கள்..

அதே அகமதாபாத் மைதானத்தில் ஒரு பாகிஸ்தானியர் அவரது தேசத்தின் கொடி அடையாளத்தோடு கூடிய வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து முழு சுதந்திரத்தோடும் மகிழ்ச்சியோடும் இந்த கிரிக்கெட் போட்டியை கண்டு களித்திருக்கிறார். கடந்த போட்டிகளை கூட நாடு முழுவதும் பயணித்து நேரில் கண்டு களித்த குறிப்பிடுகிறார். ஆனால் தான் ஒரு பாகிஸ்தானியல் பாகிஸ்தான் கொடியின் ஆடையோடு இருந்தபோதிலும் இங்குள்ள இந்தியர்களோ இந்திய அணியினரோ என்னிடம் எந்த பாகுபாடும் பார்க்கவில்லை. விரோதமும் பாராட்டவில்லை. மாறாக நட்புணர்வோடு சகோதரத்துவத்தோடு தான் இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார். அந்த மைதானத்தில் இருந்த ஒரு இலட்சம் ரசிகர்களுடன் இணைந்து அவரும் ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை கேட்டவர் தான். ஆனால் அது அவரை புண்படுத்தவில்லை. ஆனால் அப்படிப்பட்டவர்கள் அவர்களின் வெற்றியை இறைவன் நாமும் சொல்லி பேசியதை கொலை குற்றம் போல இங்கு உள்ளவர்கள் பேசுவது தான் இவர்களுக்கு இன்னமும் மத நல்லிணக்கம் என்பதன் பொருள் கூட தெரியாமல் இருப்பதை வெளிப்படுத்துகிறது.


Share it if you like it