சீன மொழியில் வாழ்த்து : மிரண்டுபோன ஸ்டாலின் !

சீன மொழியில் வாழ்த்து : மிரண்டுபோன ஸ்டாலின் !

Share it if you like it

நேற்று திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்துள்ள விளம்பரத்தில், இந்திய தேசிய கொடிக்கு பதிலாக சீனாவின் கொடியை பயன்படுத்தியுள்ள நிகழ்வானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இன்று முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் தமிழக பாஜக X பதிவில் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் ஸ்டாலின் புகைப்படத்தை பகிர்ந்து அதில் சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்தை தமிழக பாஜகவினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தமிழக பாஜக சார்பில்
நமது மாண்புமிகு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு பிடித்த மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழட்டும்! என்று பதிவிட்டுள்ளனர். இந்த பதிவினை பலரும் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.


Share it if you like it