நேற்று மாஜி கேரள முதல்வர் மகன்… இன்று மாஜி ஆந்திர முதல்வர்: காங்., இனிமா தந்த பா.ஜ.க.!

நேற்று மாஜி கேரள முதல்வர் மகன்… இன்று மாஜி ஆந்திர முதல்வர்: காங்., இனிமா தந்த பா.ஜ.க.!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண்குமார் ரெட்டி பா.ஜ.க.வில் இணைந்து இருப்பது காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி. இவரது, செயல்பாடுகளை பிடிக்காமல் பலர் அக்கட்சியில் இருந்து ஓட்டம் எடுத்து வருகின்றனர். தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். எனினும், இதுகுறித்து எல்லாம் கவலைப்படாமல் காங்கிரஸ் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், கேரள மாநில முன்னாள் முதல்வராக இருந்தவர் ஏ.கே. ஆண்டனி. இவரது, மகன் அணில் ஆண்டனி. இவர், நேற்றைய தினம் பா.ஜ.க.வில் சேர்ந்தார். இந்த நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவருமாக இருப்பவர் கிரண்குமார் ரெட்டி. இவர், இன்று பா.ஜ.க.வில் தம்மை இணைத்து கொண்டுள்ளார்.

மூத்த தலைவர்கள் பலர் காங்கிரஸில் இருந்து வெளியேறி வருவது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it