மாநிலம் முழுவதும் ஆஞ்சநேயருக்கு கோவில் – காங்கிரஸ் அந்தர் பல்டி!

மாநிலம் முழுவதும் ஆஞ்சநேயருக்கு கோவில் – காங்கிரஸ் அந்தர் பல்டி!

Share it if you like it

பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என கூறிய காங்கிரஸ் இன்று அந்தர் பல்டி அடித்து இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

எதிர்வரும் மே- 10 – ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்தவகையில், காங்கிரஸ் கட்சி அண்மையில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என கூறியிருந்தது. இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி அந்த அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இதனை, சரியாக பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.க. காங்கிரஸ் கட்சியின் உண்மையான சுயரூபத்தை அம்பலப்படுத்தியது.

இப்படிப்பட்ட சூழலில், கர்நாடகாவில் பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்யும் திட்டம் ஏதும் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. மாநில அரசால் ஒரு அமைப்பை தடை செய்ய முடியாது என காங்கிரஸின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்திருக்கிறார்.  அதேபோல், கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், “ ஆஞ்சநேயர் கோயில்கள் மேம்படுத்தப்படும். இளைஞர்களிடம் ஆஞ்சநேயரின் அருமைகளை எடுத்துரைக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என தெரிவித்திருக்கிறார்.

பஜ்ரங்க் தள் அமைப்புக்கு தடை என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்ததை எதிர்த்து, அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it