மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக காங்கிரஸ் அச்சம் !

மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக காங்கிரஸ் அச்சம் !

Share it if you like it

சென்னையில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதியன்று தி.மு.க மகளிரணியின் சார்பில் மிகப் பெரிய அளவில் `மகளிர் உரிமை மாநாட்டை’ நடத்தி முடித்தது. அதில் பங்கேற்பதற்கு முன், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், தமிழக காங்கிரஸ் முக்கிய முக்கிய நிர்வாகிகளுடன், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, பொதுச்செயலர் பிரியங்கா,தேசியவாத ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரியா சுலே, சுஷ்மிதா தேவ், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி, லேஷி சிங், ராக்கி பிர்லா, சுபாஷினி அலி, டிம்பிள் யாதவ் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னாள் தலைவர் இளங்கோவன், ‘தமிழகத்தில், பா.ஜ.க வளர்ந்து வருகிறது.அதை நாம் ஒதுக்கி தள்ளிவிட முடியாது. கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில், பா.ஜ.க வின் அரசியல் தீவிரமாக உள்ளது. அதை காங்கிரஸ் செய்யவில்லை. ஆக்கப்பூர்வமான கருத்து தெரிவிப்பதில்லை. அந்த இடத்தை பா.ஜ.க மிக சரியாக பயன்படுத்துகிறது. அதனால், அக்கட்சி வளர்ந்து வளர்கிறது

பா.ஜ.க வளர்ந்து வருகிறது என, இளங்கோவன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கூச்சலிட்டனர். இளங்கோவன் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவார். தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் அக்கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

..


Share it if you like it