பாரதப் பிரதமர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய பஞ்சாப் காங்கிரஸ் அரசு..
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ரூபாய் 42,750 கோடி மதிப்பிலான, புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட சென்று இருந்த பொழுது. அவருக்கு போதிய பாதுகாப்பினை வழங்காமல் அலட்சியம் காட்டியுள்ளது காங்கிரஸ் அரசு. பாகிஸ்தான், சீனா, உள்நாட்டு சதி, வெளிநாட்டு சதி, தீவிரவாதிகள், என பல வகையிலும் பிரதமர் மோடிக்கு கடும் அச்சுறுத்தல் உள்ளது.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, என்று ஏற்கனவே இரண்டு, பிரதமர்களை நாடு இழந்து உள்ளது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை, தீவிரப்படுத்தி இருக்க வேண்டிய பஞ்சாப் காங்கிரஸ் அரசு. பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், காங்கிரஸ்க்கு குவிந்து வருகிறது.
இந்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத், பிரதமர் காத்திருந்ததால் குண்டு ஒன்றும் வெடித்து இருக்காது என்று பொறுப்பற்ற முறையில் பேசி இருப்பதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் அரசு சோனியா குடும்பத்திடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வரும் சூழலில் ஹரிஷ் ராவத் கருத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதப் பிரதமர் மோடியை தங்களது உயிரை கொடுத்து காக்க முன்வந்த எஸ்பிஜி குழுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.