புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்த்தி நடைபெற்றது. அதில் மாநில காங்கிரஸ் தலைவர் எம்.பி வைத்திலிங்கம் தேசியக்கொடி ஏற்றினார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது தெரிய வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தேசிய கொடியை உடடியாக இறக்கி சரிசெய்த பின் மீண்டும் வைத்திலிங்கம் ஏற்றி வைத்தார்.