இளம் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து இளைஞர் ஒருவர் மர குச்சியால் மிருக தனமாக தாக்கிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜோதிமணி. இவர், பாரதப் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு குறித்து மிக கடுமையான விமர்சனங்களை முன்வைக்க கூடியவர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு சிறு குற்றம் நிகழ்ந்தாலும் இதற்கு, மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தான் காரணம் என கரூர் மாவட்டத்தில் இருந்து கொண்டே அறிக்கையை வெளியிட கூடியவர். உண்மை, வெளிவருவதற்குள் நீதிபதியாக மாறி தீர்ப்பு எழுதி விடுவதையே வழக்கமாக கொண்டவர். விடியல் ஆட்சியில், பெண்களுக்கு எதிராக நிகழும் அட்டூழியங்கள், அடாவடிகள் குறித்து இவர் பேசுவதில்லை. ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் என்றால் உடனே குரல் கொடுக்க கூடியவர். இப்படியாக, கரூர் எம்.பி.யின் சமூகநீதி இருந்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மிக கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. அதாவது, அம்மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒரு இளம் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைக்கின்றனர். இதையடுத்து, மற்றொரு இளைஞர் அப்பெண்ணை மர குச்சியால் வெளுத்து எடுக்கிறார், வலி தாங்க முடியாமல் அவர் கதறி துடித்த சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பது போல் அமைந்து இருக்கிறது. இக்காணொளி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் இச்சம்பவம் நிகழ்ந்து இருந்தால், நீதி செத்து போச்சு, நியாயம் செத்து போச்சு என கரூர் எம்.பி. ஜோதிமணி ஊரையே அழைத்து இருப்பார் என இணையதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.