குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததையே நீதி வென்றது ஜனநாயகம் வென்றது என்று கொண்டாடும் காங்கிரஸ் அதே நீதிமன்றங்கள் மோடி ஷா உள்ளிட்டவர்கள் மீதான தீர்ப்பு வழங்கியதை இன்று வரை ஏற்க மறுப்பது தான் காங்கிரசின் இரட்டைத் தன்மைக்கு சாட்சியம். இந்த தேசத்தின் மீதும் தேசிய வாதிகள் மீதும் காங்கிரசுக்கு எப்போதும் இருக்கும் வன்மத்திற்கு அடையாளம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி லலித் மோடி – நீரவ் மோடி – மோடி என்று பெயர்களை குறிப்பிட்டு அது என்னவோ திருடர்கள் எல்லாம் மோடி என்ற பெயரிலேயே இருக்கிறார்கள்.? மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாகவே இருக்கிறார்கள் என்ற ரீதியில் பேசினார். பல ஆண்டுகளாகவே பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மோடி தன்னை சேவகன் மோடி என்று குறிப்பிடும் போது திருடன் மோடி என்று அவமதிப்பதும் ரபேலில் ஊழல் செய்தவர் என்று ஏளனம் பேசுவது என்று தொடர்ச்சியாக பிரதமரை திட்டமிட்டு தனிமனித தாக்குதல் செய்து வந்தார். அதே ரீதியில் தான் குஜராத் நிகழ்ச்சியிலும் மோடியை அவமதிப்பதாக கூறி அவர் ஒரு சமூகத்தையே அவமதித்தார்.
நேரு குடும்ப இளவரசருக்கு மோடி என்பது சாதி பெயரா? குடும்ப பெயரா ? என்ற அளவிற்கு கூட பொது அறிவு கிடையாது என்பதும் அவ்வளவு அறிவு இருந்தால் அவர் இவ்வளவு தரம் தாழ்ந்த அரசியலை செய்ய மாட்டார் என்பதையும் நன்கு உணர்ந்திருந்த மோடி இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அமைதியாக கடந்து போனார். ஆனால் மோடி என்ற குறிப்பிட்ட சமூகம் சார்ந்த மக்கள் தங்களது மண்ணில் சொந்த உழைப்பில் தானும் உயர்ந்து தங்கள் சமூகத்தையும் உயர்த்தி உலகெங்கும் பயணித்து வியாபாரம் – வர்த்தகம் – தொழில் என்று பொருள் ஈட்டி தங்கள் தேசத்திற்கும் பங்களிப்பு வழங்கும் தங்கள் சமூகத்தை அரசியலில் பரம்பரை வாரிசு என்ற ஒற்றை காரணமாக கோலோச்சி வரும் ஒரு நபர் திட்டமிட்டு இழிவுபடுத்தியதை சகிக்க தயாரில்லை. தங்கள் மாநிலத்தில் மூன்று முறை முதல்வராகவும் தற்போது இரண்டு முறை பிரதமராகவும் இருக்கும் தங்கள் சமூகம் சார்ந்த ஒரு மாபெரும் தலைவரையும் அவமதிப்பையும் சகிக்க முடியாத மக்கள் அவர்களின் ஒரு பிரதிநிதி மூலமாக குஜராத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்கள்.
வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் தொடர்ச்சியாக மோடியை குறிவைத்து ராகுல் தனிமனித தாக்குதல் நடத்தி வருவதும் அந்த அடிப்படையிலேயே அவர் அங்கும் பேசியது தெரிந்த போதிலும் ஒரு தேசிய கட்சியின் தலைவராக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவருக்கு தான் பேசுவது தனிமனித சார்பா ?அல்லது சமூகத்தை சார்ந்ததா? என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பொதுநிகழ்ச்சியில் பேசும் பொறுப்பற்ற தனத்தை ஏற்க முடியாமல் கடும் கண்டனங்களை பதிவு செய்தது. மேலும் அந்த பொதுக்கூட்டத்தில் அவர் மோடி என்று முடியும் பல்வேறு பெயர்களை தொடர்ச்சியாக உச்சரித்து மோடி என்ற பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக தான் இருக்கிறார்கள் அது என்ன ஒற்றுமை? என்ற ரீதியில் அவர் கேள்வி எழுப்பியதும் அவர் திட்டமிட்டு மோடி என்ற பெயருக்கு களங்கம் கற்பிக்க முயன்றதும் சாட்சியங்கள் ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றத்தில் நிரூபணமாகி அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
நாடாளுமன்ற ஒழுங்குமுறை விதியின் படி இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர் தனது எம் பி பதவியை இழக்கக்கூடும் என்ற நியதியின் அடிப்படையில் குஜராத் நீதிமன்றத்தின் சிறை தண்டனையை முன்வைத்து கேரளா வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுலின் பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில் குஜராத் நீதிமன்றதின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது . வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் குஜராத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. நன்கு கவனிக்கவும் தண்டனையை ரத்து செய்யவில்லை. விசாரணை முடியும் வரை தண்டனையை நிறுத்தி வைத்து மட்டுமே உத்தரவிட்டது.
ராகுலின் எம் பி பதவி பறிக்கப்பட்ட காரணத்தால் அந்த குறிப்பிட்ட நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொகுதி வளர்ச்சி பாதிக்கப்படும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தார்கள் அவ்வளவே. இந்த தண்டனை நிறுத்தி வைப்பு தீர்ப்பை நீதி வென்றது. ஜனநாயகம் வென்றது. என்று காங்கிரசின் கடை தொண்டன் தொடங்கி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரை இனிப்பு வழங்கியும் குத்தாட்டம் போட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் .அவர்களது கட்சி. அவர்களது கட்சித் தலைவர். அவர்கள் தலைமை குடும்பத்திற்கான விசுவாசிகள் .அந்த வகையில் அவர்களது விசுவாசத்தை அவர்களது தலைமைக்கு வெளிப்படுத்துகிறார்கள் .அதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.
ஆனால் இன்று தங்களின் தலைவரின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததையே நீதி வென்றது என்று திருவிழா போல் கொண்டாடுபவர்கள். அதே நீதிமன்றம் தான் விசாரணை கமிஷன் தான் குஜராத்தில் நடந்த கோத்ரா சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமீத் ஷா வுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இந்த கலவரத்தில் அவர்களுக்கு திட்டமிட்ட எந்த உள்நோக்கமும் இல்லை என்பதும் பல கட்ட விசாரணைகள் பல கட்ட ஆவணங்கள் அடிப்படையில் தெளிவாக நிரூபணம் ஆகி மோடி அமித்ஷா இருவரும் குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் இன்று வரை காங்கிரஸ் கட்சியும் அதன் ஊது குழலான கம்யூனிஸ்ட் கட்சியும் கோத்ரா சம்பவம் அதைத்தொடர்ந்து நடந்த குஜராத் கலவரம் தொடர்பான விவகாரங்களில் இன்று வரை மோடி அமீத் ஷா வை குற்றவாளிகள் என்று விமர்சனம் செய்வதும் நீதியை விலைக்கு வாங்கியவர்கள். அல்லது மிரட்டி காரியம் சாதித்தவர்கள் என்று அவதூறு பேசி வருவதும் ஊரறிந்த ரகசியம்.
எங்கோ வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு உலகறிந்த கொடுங்கோலனுக்கு வலது கரமாக இருந்தவரின் மகளாகப் பிறந்து மனித நேயத்தின் அர்த்தம் கூட தெரியாத ஒரு பெண்மணி இரட்டை குடியுரிமையோடு இந்த நாட்டின் அரியனையை கைப்பற்ற முயன்று தோற்றுப் போன விரக்தியில் அதே அரியணைக்கு மக்கள் ஆதரவோடு வந்த ஒரு சாமானியனை கோத்ரா குஜராத் கலவரம் சம்பவங்களை முன் வைத்து மரண வியாபாரி என்று போகுமிடமெல்லாம் பேசி ஏளனம் பேசியது எப்படிப்பட்ட நீதி ? எந்த வகையிலான தர்மம் என்பதை காங்கிரஸ் விளக்குமா?.
மறுபுறம் நரேந்திர மோடி – அமித்ஷா இருவரையும் குற்றவாளிகளாக சித்தரிக்க வேண்டும் என்று பல்வேறு மட்டத்திலிருந்து போராளிகள் என்ற பெயரில் திட்டமிட்டு பொய் புகார்களை அரங்கேற்றியதும் அதற்கு போலியான ஆவணங்களை தயாரித்து அதன் அடிப்படையில் அவர்களை மீது வீண்பழி அவதூறு சுமத்தி களங்கம் கற்பிக்க முயன்றதும் அதன் மூலம் பெறும் அரசியல் ஆதாயம் அடைய திட்டமிட்டதும் அதே நீதிமன்றங்களில் அம்பலமாகி எத்தனையோ பேர் மீது நீதிமன்றங்கள் சிலரை எச்சரித்து அனுப்பியதும் பலரது கடுமையான திட்டமிட்ட குற்றங்களை கண்டு அதிர்ந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டதும் சமீப காலமாக பார்த்து வருகிறோம். ஆனால் இவர்கள் அனைவருக்காகவும் இன்று வரை வழக்கில் ஆஜராகும் கோடீஸ்வர வழக்கறிஞர்கள் எல்லாம் ஒன்று காங்கிரஸ் பின்னணி கொண்டவர்கள். அல்லது கம்யூனிச பின்னணி கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இன்று வரை காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சியும் இப்படிப்பட்ட விஷம பிரச்சாரங்களை போராளிகள் ஆர்வலர்கள் என்று தாங்கிப் பிடிப்பதும், நீதிமன்றம் தொடங்கி சிறப்பு விசாரணை குழு வரை குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்த மோடியையும் அமித்ஷாவையும் கொலைகாரர்கள் போல சித்தரித்து விஷம பிரச்சாரம் செய்வதும் எப்படிப்பட்ட அணுகுமுறை.?
இந்த காரணங்களை முன்வைத்து தானே குஜராத் முதல்வராக இருந்த மோடியை அமெரிக்காவில் நுழைவதற்கு அனுமதியும் விசாவும் வழங்கக்கூடாது என்று கையெழுத்திட்டு புகார் மனு அனுப்பி வைத்தார்கள். அதன் அடிப்படையில் அமெரிக்காவும் அவருக்கு விசா மறுத்து அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியின தொழிலதிபர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் குஜராத்தில் இருந்தவரை காணொளி காட்சி வாயிலாக மோடி தன் மண்ணின் மக்களை தொடர்பு கொண்டதும் எளிதில் கடந்து போகும் விஷயங்களா. ?.எந்த அமெரிக்க நாடு குஜராத் முதல்வராக அவருக்கு விசா வழங்க மறுத்ததோ ?அதே அமெரிக்கா இந்நாளில் இந்திய பிரதமராக மோடிக்கு அழைப்பு விடுத்ததும் அவருக்கு அமெரிக்காவில் உச்சபட்ச மரியாதையோடு வரவேற்பு அளித்ததையும் பார்த்த பிறகு கூட வெட்கி தலை குனிந்து மன்னிப்பு கேட்பதற்கு துப்பில்லாத காங்கிரஸ் இன்றளவும் அவரை கலவரக்காரர்- மத பயங்கரவாதி- சிறுபான்மை விரோதி என்று திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்து அவமதிப்பது எப்படிப்பட்ட அரசியல் மாண்பு. ? இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய ஊடகங்கள் இன்றும் காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டருக்கும் காவடி எடுத்துக் கொண்டிருப்பது சிறுபான்மை விரோதிகள் என்று ஆர்எஸ்எஸ் – பாஜகவை சித்தரிக்க முயல்வது ஊடக பயங்கரவாதம் இல்லாமல் வேறு என்ன ?
நேரு குடும்ப இளவல்களான ராகுலும் பிரியங்காவும் போகும் இடங்களில் எல்லாம் மோடியையும் அமித்ஷாவையும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவையும் சகட்டு மேனிக்கு வசை பாடுவதும் தனிமனித தாக்குதல் செய்து இழிவு படுத்துவதும் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்த விவகாரங்களை முன்னிறுத்தி இன்றளவும் அவர்கள் மீது புழுதி வாரி இறைத்த நாலாந்தர அரசியல் செய்வது எப்படிப்பட்ட ஜனநாயக மாண்பு ?.இதையெல்லாம் கண்டும் காணாமல் அமைதி காக்கும் நீதிமன்றங்கள் மேற்கண்ட விஷயங்களை முன் வைத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தானாக பதிய தயங்கும் நீதிமன்றங்கள் இன்று அவர்கள் மீதான நிரூபிக்கப்பட்ட தண்டனைகளை நிறுத்தி வைத்து அவர்களுக்கு உரிய ஜனநாயக வாய்ப்புகளை இறுதிவரை வழங்கத் துணிவதும் அதே ஜனநாயக வாய்ப்புகளை மோடிக்கும் அமித்ஷாவுக்கும் வழங்க மறுக்கும் ஏற்க மறுக்கும் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளை இன்றளவும் கண்டிக்க தயங்குவதும் ஏன். ?
காங்கிரசிற்கும் கம்யூனிஸ்டர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அவர்களின் இலக்கு ஒன்றே ஒன்றுதான். இந்த தேசம் ஒரு நாளும் ஆன்மீகத்தின் வழியில் பயணிக்க விடக்கூடாது. மக்களை எப்போதும் தேசியத்தின் பெயரால் ஒன்றுபட விடக்கூடாது. இங்கு எப்போதும் அமைதியின்மை – வளர்ச்சி இன்மை – பாதுகாப்பின்மை என்ற நிலை தொடர வேண்டும். அதன் காரணமாக ஸ்திரமற்ற அரசும் பாதுகாப்பற்ற சூழலும் நிலவ வேண்டும். அதுவே அவர்களுக்கும் அவர்களது அன்னிய எஜமானர்களுக்கும் எல்லா வகையிலும் ஏதுவாக இருக்கும். அவர்களின் இந்தத் திட்டத்திற்கு அவர்கள் இரண்டு வழிகளை தேர்ந்தெடுப்பார்கள். ஒன்று ஆட்சி அதிகாரம் முழுமையாக அவர்கள் கைகளில் இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களின் கைப்பிடிக்குள் இருக்க வேண்டும் .இரண்டும் இல்லையேல் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை நிம்மதியாக ஆள விடமாட்டார்கள். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து காங்கிரசையும் கம்யூனிஸ்டையும் புறக்கணிக்கும் மக்களை அவர்கள் நிம்மதியாக வாழவும் விடமாட்டார்கள். இதுதான் அவர்களின் எழுதாக சித்தாந்தம். இதை தெளிவாக உணர்ந்ததால் தான் வட இந்திய மக்கள் தாங்கள் தங்கள் சந்ததியும் பாதுகாப்பு பெற வேண்டும் எனில் காங்கிரசின் கம்யூனிஸ்டு வசமிருந்து தங்களை பாதுகாக்கும் வல்லமையுள்ள பாஜகவும் மோடியும் தான் தங்களுக்கு சரியான தீர்வு என்று ஜாதி – மத – இன – மொழி பேதம் கடந்து மோடியின் பின்னே நின்று விட்டார்கள்.
ஆனால் தீர்ப்பை நிறுத்தி வைத்ததற்கு வெற்றி விழா எடுக்கும் காங்கிரசுக்கு மக்கள் தீர்ப்பு வழங்கிய தேர்தல் முடிவுகளை ஏற்கவோ ஜீரணிக்கவோ திராணியில்லை . தன் தவறுகளை சுய பரிசோதனை செய்து திருந்தவும் மனமில்லை. ஆனால் தன்னுடைய இயல்பில் எங்கேனும் கலவரம் நிகழ்த்தி பெரும் உயிர் பலிகளை ஏற்படுத்துவதன் மூலம் ஆர்எஸ்எஸ் – பாஜகவின் மீது பழி போட்டு பிண அரசியலில் தேர்தல் ஆதாயம் கண்டுவிட முடியுமா ? மீண்டும் அரியணையை கைப்பற்றி விட முடியுமா? என்று தன்னால் ஆன அத்தனை பிரயத்தனமும் செய்து வருகிறது. காங்கிரஸின் சமநீதி சமூக நீதி என்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்களுக்கு சரி என்றால் எல்லாம் சரி. அவர்களது நேரு குடும்பத்திற்கு நல்லது ஆதாயம் என்றால் எதுவும் நியாயமே. இதைத் தவிர மற்ற எதுவும் யாரும் அவர்களுக்கு குற்றமே. குற்றவாளிகளே எனில் இவர்கள் யார்? இவர்களின் அரசியல் யாருக்கானது? .
தன் சொந்தக் கட்சித் தலைவர் மீது தற்கொலை தாக்குதல் நிகழ்த்தி அவரோடு சேர்த்து பல பேரையும் பலி கொண்டவர்களையும் அதற்கு துணை போனவர்களையும் அந்த கொலையாளிகளுக்கு துணையாக நின்று அவர்களின் விடுதலைக்கு போராடி விடுதலை வாங்கி கொடுத்து , விடுதலை பெற்று வந்தவர்களை அன்போடு அழைத்து ஆர தழுவி ஒட்டி உறவாடுபவர்களோடு கூட்டணி போட்டு அரசியல் ஆதாயம் தேடும் ஒரு கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் தேசிய உணர்வில் பிறந்த தங்களின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலி தானத்தில் வளர்ந்த பாஜக கட்சியின் தலைவரும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும் அதன் மாண்பும் மரியாதையும் நிச்சயம் புரிந்து கொள்ள முடியாத விஷயம் தான்.
தன் சொந்தக் கட்சித் தலைவரின் கொலையாளிகள் விடுதலையை எதிர்க்க முடியாதவர்கள். குறைந்தபட்சம் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு கூட செய்யாதவர்கள் . அந்த விடுதலை தீர்ப்பை கேட்டு வருந்துகிறோம் அல்லது எங்களுக்கு நீதி வேண்டும் அதற்காக இதைச் செய்கிறோம் என்று துரும்பை கூட கிள்ளி போட மனம் இல்லாதவர்கள். மாற்றுக் கட்சியின் தலைவரை அதிலும் தங்களை தொடர் தோல்வியில் ஆழ்த்தி ஆட்சி அதிகாரத்தில் அகிலம் போற்றும் தலைவராக விஸ்வரூபம் எடுப்பவரை அவமதிப்பதும் அவதூறு பேசுவதும் அவர்களுக்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை தான்.
ஆனால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட தங்கள் தலைவரின் கொலை குற்றவாளிகளின் நீதிமன்ற விடுதலையை கள்ள மவுனமாக கடந்து போனவர்கள். இன்று அதே குடும்ப வாரிசின் இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்ததை திருவிழா போல் கொண்டாடுவதை பார்க்கும்போது இவர்களின் குடும்ப பாசம் – கட்சி பாசம் – தலைமை விசுவாசம் – கொள்கை – கோட்பாடு – சித்தாந்தம் எல்லாமே அவர்களது அரசியல் ஆதாயம் ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டுள்ளதை தவிர அவர்களுக்கு சட்டத்தின் வழியிலோ தர்மத்தின் வழியிலோ பிடிப்பும் இல்லை. நம்பிக்கையும் இல்லை என்பதும் மக்கள் நலன் – தேச நலன் என்பதெல்லாம் அவர்களுக்கு எட்டிக்காய் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இவ்வளவு விஷயங்களும் கண் முன்னே நடந்த பிறகும் இன்னமும் காங்கிரஸ் – கம்யூனிஸ்டுக்கு ஆதரவாக பேசுவதும் மறுபுறம் நீதிமன்றங்கள் விடுவித்த மோடி – அமித்ஷா உள்ளிட்டவர்களை குற்றவாளிகளாக விஷம பிரச்சாரம் செய்வதும் நிச்சயம் கருத்தியல் பயங்கரவாதமே. அதை செய்பவர்கள் செய்பவர்களை ஆதரிப்பவர்கள் யாரும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பயங்கரவாதிகளே.