வட இந்திய மாநிலங்கள் பின் தங்கியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் – அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் !

வட இந்திய மாநிலங்கள் பின் தங்கியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் – அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் !

Share it if you like it

வட இந்திய மாநிலங்கள் பின் தங்கியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி டி.கே. சுரேஷ், வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவை தனி நாடாக பிரிக்க வேண்டி வரும் எனக் கூறி இருக்கிறார். ஒரு பக்கம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதேநேரத்தில், அந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவரே பிரிவினை பேசுகிறார். இந்த போலி அரசியலுக்கு; பொய் அரசியலுக்கு காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும்.

தென்னிந்திய மாநிலங்களின் வரி வருவாய், வட இந்திய மாநிலங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக டி.கே. சுரேஷ் கூறி இருக்கிறார். வட இந்தியாவின் பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் இயற்கை வளங்கள் நிறைந்தவை. இருந்தும் அவை பின்தங்கி இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் மாநிலங்கள் பின் தங்கி இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியையே பொறுப்பாக்க வேண்டும்” என தெரிவித்தார்.


Share it if you like it