சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த இரு மாநிலங்களில் எவ்வளவு சம்பாரிக்க முடியுமோ அவ்வளவு பணத்தை சம்பாரித்து, அதனை மற்ற மாநிலங்களுக்கு செலவழிக்க வேண்டும், என தி.மு.க ஆதரவாளர் சவுக்கு சங்கர் புதிய ஆலோசனை அக்கட்சிக்கு வழங்கியுள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் 7-ம் தேதி நிறைவடைந்தது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அனைத்திலும் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று கூறி இருந்தன. ஆனால், பிரிவினைவாத சக்திகள், பாகிஸ்தான் ஆசி பெற்ற ஊடகவியலாளர்கள், மோடி வெறுப்பாளர்கள் மற்றும் திருமாவளவன், போன்றவர்கள் பா.ஜ.க தோல்வியை தழுவும் என்றே ஆருடம் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி வெளியாகியது. இதில், 4 மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. அதே சமயத்தில், காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும், படுதோல்வியடைந்துள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியிடம் தற்பொழுது பணம் இல்லை, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த இரு மாநிலங்களில் எவ்வளவு சம்பாரிக்க முடியுமோ அவ்வளவு பணத்தை சம்பாரித்து, அதனை மற்ற மாநிலங்களுக்கு செலவழிக்க வேண்டும். வழக்கு வந்தால் அதனை பார்த்து கொள்ளலாம் என்று சவுக்கு சங்கர் தமிழ் மிண்ட், இணையதள ஊடகத்தின் வாயிலாக காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.