குடும்ப அரசியல் மற்றும் ஒரே தலைமையின் தீவிர ஆதிக்கம் காரணமாக கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி, உ.பி, தமிழகம், என காங்கிரஸ் கட்சியில் தற்பொழுது உட்கட்சி பூசல் தீவிரமடைந்து வரும் நிலையில்., காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் இப்பொழுது பெரும் சூறாவளியே வீச துவங்கியுள்ளது.
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவஜோத் சித்துவை நியமிக்க அக்கட்சியின் தலைமை எடுத்த முடிவுக்கு அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் தனது எண்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
கட்சித் தலைமை தம் மீது விரும்பத்தகாத முடிவுகளைத் திணிப்பதாகவும். அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள இச்சூழ்நிலையில் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்வது தேர்தல் முடிவுகளை கடுமையாக பாதிக்கக்கூடும் என்று குறிப்பிட்டு உள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் ஆட்டம் கண்டு வரும் நிலையில் பஞ்சாப் முதல்வரின் கடிதம் அக்கட்சியின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.