சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு எம்.பியுமாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக கடந்த மாதம் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி இருந்தார். இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் டெல்லியில் முகாமிட்டு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து இருந்தனர். அதேபோல, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நாடு முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டம், மற்றும் வாகனங்களுக்கு தீ வைப்பு என அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இப்படிப்பட்ட சூழலில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ரேணுகா செளத்ரி கலந்து கொண்டார். அப்போது, காவல்துறை உயர் அதிகாரியின் சட்டையை பிடித்து இழுத்து அவர் அவமதிப்பு செய்து இருந்தார்.
அதேபோல, மற்றொரு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கும் நெட்டா டிசோசா என்பவர் ராணுவ படையினர் மீது எச்சில் உமிழ்ந்து தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்து இருந்தார். இப்படியாக, காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, ராகுல் காந்தியை போன்று சோனியா காந்தியும் அமலாக்கத்துறையின் விசாரணை வலையத்திற்குள் வந்து இருக்கிறார். இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வேண்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கு(தொ)ண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற காணொளிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.