தொடரும் ஆவின் பொருட்களின் விலை ஏற்றம் – விடியல் அரசின்  விழாக்கால பரிசு

தொடரும் ஆவின் பொருட்களின் விலை ஏற்றம் – விடியல் அரசின் விழாக்கால பரிசு

Share it if you like it

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த நாள் முதலாய் திமுக அரசில் சொத்துவரி – மின் கட்டணம் போக்குவரத்து கட்டணம் உயர்ந்தது . ஆவின் பொருட்களும் விலை உயர்த்தப்பட்டது. இதன் மூலமாக நேரடியாக மறைமுகமாக பல்வேறு பொருட்கள் சேவைகள் விலை உயர்த்தப்பட்டது. கால ஓட்டத்தில் விலைவாசி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்கள் முதல் சேவை வசதிகள் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் விலை உயர்வு என்பது அத்தியாவசியமானது. தவிர்க்க முடியாதது . அதே நேரத்தில் அந்த விலை உயர்வு நியாயமாக மக்களின் வாழ்க்கை தரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் அதை அரசு முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். அதுவே மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாளர்களுக்கு அழகு .

இங்கு விலைவாசியை கட்டுப்படுத்தி பதுக்கல் கள்ளச் சந்தையை கண்காணிக்க வேண்டிய மாநில அரசு தொடர்ச்சியாக அரசு நிறுவனங்கள் சார்ந்த உற்பத்தி பொருட்கள் சேவைகளை தொடர்ச்சியாக விலையேற்றம் செய்து வருவது தமிழகத்தில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த விலை ஏற்றத்திற்கு எல்லாம் கடந்த கால ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மை மற்றும் நிதிநிலை மேலாண்மை தோல்வி உள்ளிட்ட காரணங்கள் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது பொதுவாக அரசியல் கட்சிகள் இடையே இது வழக்கமான ஒன்று என்றாலும் விலையேற்றும் தவிர்க்க முடியாதது என்று ஆரம்பத்தில் அனைவரும் வேண்டாம் வெறுப்பாக இந்த விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்ளத்தான் செய்தார்கள்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டு கால இடைவெளியில் ஆவின் பால் பொருட்கள் முதல் வெண்ணெய் நெய் இணைப்பு வகைகள் ஐஸ்கிரீம் பால்பானகங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவின் பொருட்களும் தொடர்ச்சியாக பலமுறை விலை உயர்த்தப்பட்டதும் அவை ஒரு வரைமுறை இல்லாமல் தாறுமாறாக விலை உயர்ந்து அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருக்கும் பால் நெய் உள்ளிட்ட பொருட்களை மக்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுத்தும் அளவில் பொருளாதாரம் பாதிப்பை ஏற்படுத்தியது.

பால் நெய் உள்ளிட்ட பொருட்கள் அன்றாட மக்களின் வாழ்வில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள். அதிலும் பால் பெரியவர்கள் குழந்தைகள் நோயாளிகள் என்று அனைவருக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாகிறது. இதில் கலப்படம் தரம் சுகாதாரம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு தனியார் பொருட்களை வாங்குவதில் மக்களுக்கு சிறு தயக்கம் உண்டு. ஆனால் ஆவின் பால் பசுவின்பால் என்ற நம்பிக்கை அரசாங்கத்தின் மூலமாக ஆவின் தயாரிப்பு என்பதால் தரம் சுகாதாரம் இருக்கும் என்ற நம்பிக்கை காரணமாக பச்சிளம் குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை அனைவருக்கும் பொருளாக ஆவின் பாலையே பெரும்பாலான மக்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.

மக்களின் உணவுப் பொருட்களில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது . நெய் ஆடம்பர பொருள் அல்ல . அது அத்தியாவசிய உடல் நலனையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் ஒரு உணவுப் பொருள். அதில் இருக்கும் உயிர் சத்துக்களும் நல்ல கொழுப்பும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நலனுக்கும் ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசிய தேவையாகிறது . அதன் காரணமாக சாமானிய மக்கள் கூட வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கென்று ஆவின் நெய் பொருளை தவறாமல் வாங்கி உபயோகிப்பார்கள்.

பாலும் நெய்யும் அத்து தரப்பு மக்களுக்கும் தினசரி உபயோகத்தில் இருக்கும் அத்தியாவசிய பொருளாகிறது . தரம் சுகாதாரம் நம்பிக்கை என்ற அடிப்படையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் குளறுபடிகள் இருந்தாலும் இன்னமும் கூட ஆவின் பொருட்களையே நம்பி வாங்கும் சூழல்தான் நிலவுகிறது . இந்த சூழலை பயன்படுத்தி இந்த பொருட்களின் தரத்தை பாதுகாத்து மக்களின் நம்பிக்கையை உயர்த்தி ஆவின் பொருள்களின் உற்பத்தி விற்பனையை அதிகரித்து அதன் மூலம் ஆவின் நிறுவனத்தை லாபகரமான தொழில் நிறுவனமாக மாற்றி அமைக்க வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால் ஆளும் திமுக அரசு அதை செய்யாமல் மாதத்திற்கு ஒரு முறை ஆவின் பால் பொருட்கள் விலையை உயர்த்துவதும் ஆவினில் இருக்கும் நிர்வாக குளறுபடிகள் குழப்பங்களை கண்டுகொள்ளாமல் அதிலும் அரசியல் செய்வதும் ஆவினை மேலும் நஷ்டத்திலும் விற்பனை குறைவு உள்ளிட்ட காரணங்களால் மக்களின் அதிருப்திக்குமே ஆளாக்குகிறது.

இதன் மூலம் தங்களின் தேவைக்கு தரமான பால் நெய் உள்ளிட்ட பால் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய தயாராக இருக்கும் நம்பிக்கையான தரமான பொருட்களை வழங்கும் பிற மாநில அரசின் பால் பொருட்களையோ அல்லது தனியார் நிறுவனங்களையோ தேட வேண்டிய கட்டாயம் தமிழகத்தில் இருக்க பல தரப்பட்ட மக்களுக்கும் ஏற்படுகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தின் மாநில அரசின் பால் பொருள் தயாரிப்பான நந்தினி தயாரிப்பு பால் பொருட்கள் நாடு முழுவதும் பால் பொருட்களுக்கு பிரசித்தி பெற்ற அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து எளிதாக விநியோகிக்கப்படும் திருமலா உள்ளிட்ட தனியார் பொருட்கள் வாங்கி உபயோகிக்க தமிழக மக்கள் தயாராகிறார்கள்.

இதன் மூலம் ஆவின் தயாரிப்புகள் விற்பனை குறைந்து ஒரு புறம் பொருட்கள் தேக்கமடைகிறது. சில தினங்களிலே கெட்டுப் போகும் உணவுப் பொருட்கள் பாழாகி ஆவின் நஷ்டம் கூடுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்து அமுல் நந்தினி உள்ளிட்ட பிற மாநில பொருட்களின் வருகையும் அவற்றின் சந்தை ஆதிக்கமும் ஆவியின் வியாபாரத்தை பாதிக்கிறது. இதனால் ஆவின் நஷ்டப்படுகிறது அதனால் பிற மாநில பொருட்களை தமிழகத்தில் நுழைவதற்கு அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசிற்கு தமிழக அரசு கடிதம் எழுதுகிறது. அந்தக் குற்றச்சாட்டு கடிதத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய வகையில் தெரியப்படுத்த வேண்டிய சரியான நடைமுறையை கூட பின்பற்றாமல் குஜராத் மாநில நிறுவனங்களை தமிழகத்தில் கட்டுப்படுத்துங்கள் இதனால் ஆவின் நிறுவனத்தின் நஷ்டத்தை தடுக்க முடியும் என்று சம்பந்தமே இல்லாமல் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி அதிலும் தமிழக அரசு சில்லறைத்தனமான அரசியலையே செய்கிறது.

ஆனால் உண்மையில் இங்கு ஆவின் நிறுவனத்திற்கு தினம்தோறும் பால் வழங்கும் கால்நடை பராமரிப்பு பால் வழங்குவோர்களுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை . அவர்களுக்கு கொடுக்கப்படும் பணமும் சீராக சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என்ற அதிருப்தியும் குற்றச்சாட்டையும் இங்குள்ள பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்தின் மீது ஆதாரத்தோடு முன் வைக்கிறார்கள் . அதே நேரத்தில் பிற மாநிலங்களை சேர்ந்த மாநில அரசின் பால் நிறுவனங்களும் தனியார் பால் பொருள் விற்பனை மையங்களும் இங்கு பால் பெற்றுக் கொள்ளவும் அதற்கு ஆவினை விடவும் கூடுதலான விலையை தரவும் தயாராக இருக்கிறது . அதே நேரத்தில் உரிய காலத்தில் பண பட்டுவாடா ஆவணங்கள் நிர்வாகம் சீராக பாதுகாக்கப்படுவது என்று இங்குள்ள மக்களின் நம்பிக்கை நல்லெண்ணத்தையும் அவை பெற்றிருக்கிறது.

ஆனால் ஆவினுக்கு குறைந்த விலையில் இங்குள்ள பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்க வேண்டும். ஆவினில் இருக்கும் பண விநியோகத்தின் தடை தாமதம் குளறுபடிகள் அத்தனையும் அவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் . இதை எல்லாம் இங்கு உள்ள மாநில அரசு அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தாலும் எதையும் சரி செய்யாது சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஆவினுக்கு பால் வினியோகம் செய்யும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு என்று எந்த முயற்சியையும் செய்யாது.

ஆனால் பிற மாநிலங்களில் இருந்து வந்து இங்குள்ள தமிழக மக்களின் உழைப்பில் அவர்கள் கொடுக்கும் பால் பெற்றுக் கொண்டு அதற்கு கூடுதல் விலையும் உரிய காலத்தில் பண பட்டுவாடாவும் செய்து போகும் பிற மாநில நிறுவனங்களை தமிழகத்தில் வரக்கூடாது என்று தடை செய்ய முயற்சி செய்கிறது. ஆவின் பொருட்கள் சீராக விநியோகம் செய்வதிலும் பொருட்கள் விநியோகிப்பதை திருட்டு அபகரிப்பு உள்ளிட்ட நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யவும் மாநில அரசு தயார் இல்லை . தமிழகத்தில் சந்தையில் தங்கு தடை இன்றி உரிய காலத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் வினியோகம் செய்யும் பிற மாநில பால் உற்பத்தி விநியோக நிறுவனங்களின் மீது தமிழகத்தின் சந்தையை ஆக்கிரமித்து ஆவின் நிறுவனத்தை நஷ்டப்படுத்துவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

உண்மையில் இரண்டு ஆண்டுகளில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களில் தரம் இன்மை அளவு குறைவு சுகாதார சீர்கேடு தொடர்ச்சியான விலையேற்றம் என்று பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வருவது தான் எதார்த்த உண்மை . இதனால் வெறுத்துப்போன மக்கள் தங்களுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் பால் மற்றும் பால் பொருட்களை கிடைக்கும் இடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிற மாநில பொருட்களையோ வெளிமாநிலங்களில் இருந்து வரும் தனியார் பொருட்களையோ தாமாக முன்வந்து வாங்குகிறார்கள் .

தடையற்ற வியாபாரம் சீரான வினியோகம் எந்நேரமும் சந்தையில் கிடைக்கும் பால் மற்றும் பால் பொருட்கள் வினியோகத்தில் அத்தியாவசிய பொருட்கள் சேவையில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் பிற மாநில பால் பொருட்களையும் தனியார் நிறுவனங்களின் பால் பொருட்களையும் சந்தை போட்டியாக குறி வைத்து அவற்றை தமிழகத்தில் நுழைவதை தடுக்கவும் தமிழக சந்தையில் இருந்து அவற்றை அப்புறப்படுத்தவும் மாநில அரசு முயல்கிறது . இந்த நெருக்கடியில் கூட ஆவின் பொருட்களின் விலை ஏற்றத்தை மட்டுமே குறிவைத்து செயல்படுகிறதே தவிர அந்த ஆவின் பொருள்களின் தரம் சுகாதாரம் நிலைநிறுத்தம் பற்றியோ தடையின்றி சீராக விநியோகம் செய்வதற்கோ எந்நேரமும் பொருட்கள் மக்களுக்கு சகஜமாக கிடைப்பதற்கு உரிய வழிவகை செய்யவும் தயாராக இல்லை.

இதையெல்லாம் சீர்தூக்கி பார்க்கும் போது மாநில அரசுக்கு ஆவின் நிறுவனத்தின் நஷ்டத்தை தடுக்க வேண்டும். அதன் மூலம் வரும் உற்பத்தி வருவாய் லாபத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் வெளிப்படுகிறது . அந்த லாபத்தை தக்க வைக்க போட்டி வியாபாரிகளாக இருக்கும் பிற மாநில பொருட்களையும் தனியார் பால் பொருட்களையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கே முயற்சி செய்கிறது. மாறாக ஆவின் பொருட்களின் உற்பத்தி அளவு தரத்தை உயர்த்தவோ அதன் மூலம் ஆவினை சிறந்த பொருளாக தமிழகத்தில் நிலை நிறுத்துவதும் பிற மாநிலங்களுக்கும் சந்தைபடுத்தி ஆவினை ஆக்கபூர்வமான லாபகர நிறுவனமாக மாற்றுவதற்கு முயற்சி செய்யவில்லை.

தமிழக மக்களுக்கும் தங்களின் சொந்த மாநில பொருளான ஆவின் பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும். ஆவினில் தரமான பொருட்கள் நியாயமான விலையில் சீராக கிடைத்தால் அவர்கள் பிற மாநில பொருட்களை தேட வேண்டிய அவசியம் இருக்காது என்பதை உணர்ந்து அதை சரி செய்ய தயாராக இல்லை. மாறாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் பால் பொருட்களை எப்படி தடுக்கலாம் ? அதன் மூலம் மக்களை எப்படி கட்டாயமாக ஆவின் பொருள்களை மட்டுமே வாங்க வைக்கலாம் ? என்று சர்வாதிகார மனநிலையிலேயே செயல்படுகிறது.


Share it if you like it