தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தி.மு.கவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் என தொடர்ந்து பலர் பிரிவினையை தூண்டும் விதமாக இன்று வரை பேசி வருகின்றனர்.
சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையை சேர்ந்த நாகராஜன், தன் முகநூல் பக்கத்தில், மத்திய அரசு அளித்த தடுப்பூசி சான்றிதழில், நான்கு சிங்கம், அசோக சக்கரம் உள்ளடக்கிய, மத்திய அரசின் முத்திரையை எடுத்து விட்டு, அதில், தமிழக அரசின் கோபுர முத்திரையை மாற்றி வைத்துள்ளார்.
திராவிட மக்கள், ஒன்றிய உயிரினங்கள் என, பல திட்டங்கள், திடீரென உருவாக்கப்படுவதற்கு பின்னால், தி.மு.கவின் 1962-ம் ஆண்டு பிரிவினை கோரிக்கை போன்ற ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய உள்துறை விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ.க விருப்பம் தெரிவித்துள்ளதாக இச்செய்தி தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.