மதமாற்ற சர்ச்சை: டெல்லி அமைச்சர் ராஜினாமா!

மதமாற்ற சர்ச்சை: டெல்லி அமைச்சர் ராஜினாமா!

Share it if you like it

மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

டெல்லியில் கடந்த 5-ம் தேதி மதம் மாறும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நூற்றுக்கணக்கானோர் பௌத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த மதமாற்ற நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் கலந்து கொண்டார். இந்த விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.க.வினர், கவுதமை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால், ராஜேந்திர பால் கவுதமோ, அரசியலமைப்பின் கீழ் அளிக்கப்பட்டிருக்கும் உத்தரவின்படி, தனது மதத்தைக் கடைப்பிடிக்க தனது உரிமை உண்டு என்று கூறிவந்தார்.

இதனிடையே, பா.ஜ.க.வினர் டெல்லி துணை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து ராஜேந்திர பால் கவுதம் மீது புகார் அளித்தனர். மேலும், வதோதராவில் நேற்று முன்தினம் நடந்த ஆம் ஆத்மியின் ‘திரங்கா பேரணி’க்கு முன்னதாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி கட்சி பேனர்களை கிழித்து எறிந்தனர். இப்படி பா.ஜ.க.விடமிருந்து தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வந்ததால், டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால் கவுதம் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.


Share it if you like it