சமையல் சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பு

சமையல் சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பு

Share it if you like it

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 விலை குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று ( செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 200 குறைப்பதென முடிவு செய்யப்பட்டது.ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு இந்த விலை குறைப்பு பரிசை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். வரும் 1-தேதி முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு 7,500 கோடி கூடுதல் செலவு பிடிக்கும்.


Share it if you like it