ஒரு காதலி… 2 திருமணம்: சர்ச்சையில் ‘குக் வித் கோமாளி’ புகழ்!

ஒரு காதலி… 2 திருமணம்: சர்ச்சையில் ‘குக் வித் கோமாளி’ புகழ்!

Share it if you like it

தனது காதலியை சுயமரியாதைப் படி ஒருமுறையும், கோயிலில் வைத்து ஹிந்து திருமண முறைப்படி ஒருமுறையும் என 2 முறை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் குக் வித் கோமாளி நடிகர் புகழ்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிரபலமான ஒன்று “குக் வித் கோமாளி.” இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நடத்திருக்கிறார், நடித்தும் வருகிறார். இதன் மூலம், இவருக்கென தனியாக ரசிகர் பட்டாளமே உண்டு. கடலூரைச் சேர்ந்த இவர், கோவை போத்தனூரைச் சேர்ந்த பென்ஸி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருவருக்கும் திண்டிவனம் அருகேயுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோயில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில், சின்னத்திரை மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதில் ஹைலைட் என்னவென்றால், புகழ், பென்ஸி திருமணம் இரண்டாவது முறையாக நடந்திருப்பதாக கூறப்படுவதுதான். அதாவது, புகழும், பென்ஸியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஒருநாள் கோவைக்குச் சென்றிருக்கிறார். அப்போது, புகழும், பென்ஸியும் கோவை பெரியார் படிப்பகத்தில் வைத்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் விவகாரமே. கோவை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில்தான் இத்திருமணமே நடந்திருக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோயிலில் வைத்து காதலி பென்ஸியை புகழ் திருமணம் செய்திருக்கும் நிலையில், தற்போது சுயமரியாதை திருமணம் செய்து கொண்டது வெளிச்சத்துக்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைப் பார்த்து விட்டு பலரும் தான் சுயமரியாதை சிந்தனை கொண்டவன் என்பதை நிரூபிக்க பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், உறவினர்களை திருப்திப்படுத்துவதற்காக கோயிலில் வைத்து ஹிந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறிவருகிறார்கள். மேலும், சிலரோ புகழுக்கு எதற்கு இந்த இரட்டை வேடம். ஒன்று சுயமரியாதைத் திருமணத்தோடு நிறுத்திக் கொண்டு, தன்னை பெரியாரிஸ்ட்டாக காட்டிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது கோயிலில் திருமணம் செய்தபோதாவது, தான் பெரியாரிஸ்ட் இல்லை, ஆன்மிகவாதிதான் என்பதை தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். அப்படி செய்யாதது மிகப்பெரிய தவறு என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.


Share it if you like it