உலகளாவிய டெண்டர் மூலம் தி.மு.க அரசு இறக்குமதி செய்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம்….! மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5.71 கோடி..!

உலகளாவிய டெண்டர் மூலம் தி.மு.க அரசு இறக்குமதி செய்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம்….! மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5.71 கோடி..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் படி செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் மருத்துவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக கொரோனா தொற்றின் வீரியம் தமிழகம் மட்டுமில்லாது இந்தியா முழுவதும் படி படியாக குறைந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் தமிழகத்திற்கு தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வந்தாலும், தொடர்ந்து மோதல் போக்கையே தி.மு.க அரசு அந்நாட்களில் கடைபிடித்து வந்தது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை முழுமையாக நாங்கள் கட்டுப்படுத்த உள்ளோம் எனவே உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய உள்ளோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பொழுது அறிவித்து இருந்தார். இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் செல்வகுமார் அவர்கள் மத்திய அரசு தமிழகத்திற்கு இலவசமாக வழங்கிய தடுப்பூசிகள் குறித்தும் தமிழக அரசு மத்திய அரசின் உதவியில்லாமல் எவ்வளவு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து உள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்து உள்ளார்.

உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Image
Image

Share it if you like it