கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் ஞானஸ்தானம் செய்த போது ஏரியில் தவறி விழுந்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அப்பாவி மக்களின் இயலாமையை தங்களுக்கு சாதகமாக கிறிஸ்தவ மிஷநரிகள் பயன்படுத்தி கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில், ஏழை, எளியவர்களுக்கு ஆசைவார்த்தைகளை கூறி அவர்களை மதமாற்றம் செய்யும் பணியை கிறிஸ்தவ மிஷநரிகள் இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் ஹிந்து மதத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு ஞானஸ்தானம் செய்து வைக்கும் விதமாக ஏரிக்கு அழைத்து சென்று இருக்கிறார். இதையடுத்து, வழக்கமான சம்பிராதயங்கள் முடிந்த பின்பு அப்பெண்மணியை பாதிரியார் நீரில் முங்க வைத்து எழுப்ப முயன்று இருக்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக பாதிரியாருடன் சேர்ந்து பெண்ணும் நீரில் முழ்கி உயிருக்கு போராடிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. .