இது ஏசு படம் அல்ல பிசாசு படம்: இதை வீட்டில் வைத்தால் அடிப்பேன்… கிறிஸ்தவ பாதிரியார் எச்சரிக்கை!

இது ஏசு படம் அல்ல பிசாசு படம்: இதை வீட்டில் வைத்தால் அடிப்பேன்… கிறிஸ்தவ பாதிரியார் எச்சரிக்கை!

Share it if you like it

கிறிஸ்தவர்கள் ஏசு படம் என்கிற பெயரில் தாடிகாரரின் புகைப்படத்தை வீட்டில் வைத்தால் அடிப்பேன் என பாதிரியார் ஒருவர் பேசியிருக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பவர் உமா சங்கர். இவர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்பு, அந்த மதத்தை பரப்புவதையே தனது முழுநேர தொழிலாக கொண்டவர். அரசின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் அப்பட்டமாக ஒரு மதத்தை பரப்புவது சரியா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், கிறிஸ்தவ மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இவர் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், அவர் கூறியிருப்பதாவது ;

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கடவுள், கடவுள் என்று சொல்லுகிறார்கள். பிசாசு வீட்டிற்கு வெளியில் இல்லை. வீட்டிற்குள் உள்ளது. கிறிஸ்தவர்கள் என்று சொல்ல கூடிய போலி கிறிஸ்தவர்கள் வீட்டில்தான் உள்ளது. படமே, வைக்க கூடாது என்று சொல்லுகிறோம். எந்த கிறிஸ்தவர் வீட்டிற்குள் சென்றாலும் ஒரு தாடிகாரர் படம் இருக்கு. அப்படம், இருந்தாலே அந்த வீடு பிசாசு கையில்தான். இதனை, எத்தனை முறை சொன்னாலும் யாருக்கும் புரியவில்லை.

பல கிறிஸ்தவர்கள் வீட்டில் மகிழ்ச்சி இல்லை என்றால் இதற்கு முக்கிய காரணமே இந்த தாடிகாரர்தான். எவன் வீட்டில் எல்லாம் ஏசு படம் என்று இந்த தாடிகாரனின் படம் இருக்கிறதோ அவனை எல்லாம் கம்பு எடுத்து அடிக்க வேண்டும். நாலு பேரை கம்பு எடுத்து அடித்தால் 5-வது ஆள் இந்த படத்தை வீட்டில் வைக்க மாட்டான் என கூறியுள்ளார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it