ஆ.ராசா, திருமா ஆட்டம் குளோஸ்… எஸ்.சி. சலுகையை ஆய்வு செய்ய குழு!

ஆ.ராசா, திருமா ஆட்டம் குளோஸ்… எஸ்.சி. சலுகையை ஆய்வு செய்ய குழு!

Share it if you like it

மதம் மாறிய தலித்களுக்கு பட்டியலின ஜாதி அந்தஸ்துடன் சலுகைகளை வழங்குவது தொடர்பான பிரச்னையை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது மத்திய அரசு.

ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த தலித்களை பட்டியல் இனத்தில் சேர்க்க 1950-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பிற மதத்தினரும் தங்களையும் பட்டியலினத்தில் சேர்க்கும்படி வலியுறுத்தினர். ஆனால், ஹிந்து சமூகத்தில் மட்டுமே தீண்டாமை என்ற நடைமுறை இருந்ததாகக் கூறி மற்ற மதத்தவர்களை சேர்க்க அரசாங்கம் மறுத்து விட்டது. எனினும், காலப்போக்கில் சீக்கியம், பௌத்தம் ஆகியவை ஹிந்து மதத்தின் கிளைகளாகக் கருதப்பட்டு, முறையே 1956 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் அம்மதத்தினர் மட்டும் பட்டியலின மக்கள் பட்டியலில் சேர்த்தனர்.

இதையடுத்து, ஹிந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்படாது என்றும், பட்டியலினத்தவருக்கான சலுகைகளும் வழங்கப்படாது என்றும் அரசு அறிவித்தது. காரணம், ஹிந்து தலித்களாக இருந்த பலரும் கிறிஸ்தவம் மற்றும் முஸ்லீம் மதத்தினருக்கு மாறிவிட்டு, பட்டியலின சலுகைகளை அனுபவித்து வந்தனர். இதனால், பட்டியலின மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் தடைபட்டது. இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதால், மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு சலுகைகள் கிடையாது என்று அரசு அறிவித்தது.

ஆகவே, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் மதம் மாறினாலும், அதை ரகசியமாக வைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதேசமயம், தான் மாறிய மதத்துக்கு ஆதரவாக பிரசாரம், பிரசங்கம் போன்ற செயல்பாடுகளில் வெளிப்படையாகவே ஈடுபடுவார்கள். ஆனால், அவர்களது சான்றிதழ்களை மாற்றுவதில்லை, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஹிந்து என்றுதான் இருக்கும். இவர்கள்தான் கிரிப்டோ கிறிஸ்தவர்கள், கிரிப்டோ முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுபவர்கள். இப்படி மாதம் மாறிய இவர்கள், பட்டியலின சமூக மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளை தட்டிப் பறித்து வருகின்றனர். இதனால், உண்மையான பட்டியலின மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த சூழலில்தான், ஜாதி இட ஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களை கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி விசாரித்தது. அப்போது, அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலித்திலிருந்து மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை 3 வாரங்களுக்குள் சமர்ப்பிப்பதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்தே மதம் மாறிய தலித்களுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பான பிரச்னையை ஆராய கமிஷன்  அமைக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான இக்குழுவில் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) ரவீந்தர் குமார் ஜெயின் மற்றும் யு.ஜி.சி. உறுப்பினர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. தலித் இனத்தவர்களில் மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்குவதன் தகுதிகள், பிற எஸ்.சி. சமூகங்கள் மீது இத்தகைய நடவடிக்கையின் தாக்கங்கள் மற்றும் மதமாற்றத்தால் ஏற்படும் சமூக, பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றை இக்குழு ஆராயும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவரிடம் கேட்டபோது, “இதன் மூலம் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு செக் வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் எம்.பி.யுமான திருமாவளவன், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, சென்னை மேயராக இருக்கும் பிரியா உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள், தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல அரசியல் கட்சியினரும் கிரிப்டோ கிறிஸ்தவர்களாகவும், கிரிப்டோ முஸ்லீம்களாகவும் இருப்பதாக குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஆகவே, இக்குழுவின் ஆய்வு முடிந்து அறிக்கை சமர்ப்பித்த பிறகு, இவர்களும் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும்” என்றார்.


Share it if you like it